புதன், 21 ஆகஸ்ட், 2024

குளச்சல் துறைமுகம் ரூ. 300 கோடியில் விரிவாக்கம் :கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா,  நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- ரூ. 300 கோடி மதிப்பீட்டில் குளச்சல் மின்பிடித்துறைமுக விரிவாக்கம் அமையவுள்ள இடம் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டதோடு, அதன் திட்ட விளக்கம் கேட்டறியப்பட்டது. மேலும், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தி மீன்விற்பனை செய்யவும், மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தவும் போதிய இடவசதியினை ஏற்படுத்தி தர குளச்சல் மீன்பிடித்துறைமுக பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்
அக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குளச்சல் புனித மரியன்னை தொடக்க பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் அருகாமையில் அமைந்துள்ள பனை வெல்ல கூட்டுறவு சங்கம் பயன்படுத்தபடாத இடத்தினை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திட பொது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து, அதற்கான இடத்தினை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மா. சின்னகுப்பன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் Insta வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை Download செய்து மேலும் பலருக்கு அனுப்பியதாக நான்கு பேர் மீதும் போக்சோ வழக்குப்பதியப்பட்டுள்ளது மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் அபினேசுக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு
சிறிது நாள் கழிந்து இருவரும் வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அபினேஷ் சிறுமியை தன்வயப்படுத்தி அவரை வீடியோ காலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அச்சிறுமி அபினேசுடன் நட்பை முறித்துக் கொள்ளவே, கோபமடைந்த அபினேஷ் தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதனை அபினேஷின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து அதனை மேலும் பலருக்கு சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் வரும் 22 அன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்

கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் 22.08.2024 (வியாழக்கிழமை ) அன்று காலை 8.00 மணி முதல் 2.00 மணி வரை மின் தடை கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை,மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம்,எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம்
முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலணி. ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. #karungal #paliyadi #kanniyakumari

தக்கலையில் கணவனை விட்டுட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்

 தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள  காதலனுடன் சென்ற இளம்பெண்

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வார இறுதி அல்லது வரும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்பு



Weather night update:- 15/8/2024, 8:30 pm 
=============
  கடந்த சில நாள்களாக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டி நிலை கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது அகன்று இன்று கேரளாவில் கொச்சி கடற்கரையை ஒட்டி அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சியாக சுழன்று வருகிறது தற்போது !
   இதனால் இன்று பகல் நேரத்தில் 15_8_2024 #வியாழன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் காற்று ஊடுருவ ஆரம்பித்து உள்ள காரணம் காற்று வீசும் திசைக்கு எதிரே நிற்கும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சூழ்ந்து வானுயந்து நிற்கும் மேற்குதொடர்ச்சி மலைகளில் பகல் நேரம் முழுவதும் மேக கூட்டங்கள் உருவாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளான #கோதையார்,#அப்பர்கோதையார், #அச்சன்காடு, #அகஸ்தியர்தெற்குமலை சரிவு குமரி #முத்துகுழிவயல் , உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்தது ,
    இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அரபிக்கடல் பகுதியில் தற்காலிகமாக சுழன்று வருவதால் இன்று #இரவு ,#நள்ளிரவில் , நாளை வெள்ளிக்கிழமை #அதிகாலை ,காலை நேரத்தில் ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதும் என்பதால் மேக கூட்டங்கள் உருவாகி பரவலாக மிதமானது முதல் சாரல் மழை வரை கன்னியாகுமரி ,கேரளா சமவெளி பகுதியில் நள்ளிரவுக்கு மேல் #அதிகாலை, #காலை நேரத்தில் பொழியும் வாய்ப்பு உள்ளது,
   இனி வரும் அனைத்து நாளிலும் #நள்ளிரவில், #அதிகாலை ,#காலை நேரத்தில் தினசரி குமரி மாவட்டத்தில் மழை கட்டாயம் அனைத்து பகுதிகளிலும் இருக்கும்
    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வார இறுதி அல்லது வரும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்பு உள்ளது இந்த மேலடுக்கு சுழற்சி வலிமை பற்று வலுவான ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் தென்மேற்கு பருவ காற்றை கன்னியாகுமரி கேரளாவிற்கு வரும் நாளில் வலுவான மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோத ஆரம்பிக்கும் பட்சத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே இருக்கும் கன்னியாகுமரி கேரளா சமவெளி பகுதி முழுவதுமே வரும் வாரத்தில் சிறப்பான மழை வாய்ப்பு உள்ளது,
   எனவே நெல் அறுவடை ஆரம்பித்து இருக்கும் விவசாயிகள் இன்னும் 2-3 நாளில் அறுவடை பணிகளை விரைவாக முடிப்பது நல்லது !
    ==================
மீனவர்களுக்கான காற்று எச்சரிக்கை இந்த வார இறுதி முதல் அடுத்த வாரம் முழுவதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது 
==================



#weather #colacheltoday #kanniyakumari 
#nagercoil 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

குழித்துறை, களியக்காவிளை பகுதியில் 13.8.2024 (செவ்வாய் கிழமை) மின்தடை

மின் தடை 

குழித்துறை, களியக்காவிளை, பளுகல் பகுதியில் 13.8.2024 (சொல்வாய் கிழமை) மின்தடை

குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு,கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் சொல்வாய் கிழமை (ஆகஸ்ட்.13) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

_____________________________________________



புதுக்கடை, இரவிபுதூர்கடை, கிள்ளியூர், சூரிய கோடு, ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளில் 12 .8. 2024 முதல் 17.8.2024 வரை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை 

12 8 2024 அன்று கீழ்குளம் ‌.பொத்தியான் விளை. வில்லாதிவிளை, பாறையடி, வெள்ளிகோடு, சீயோன்மலை, கண்ணனூர், பாரதியார்தெரு, அன்னைதெரசா காலனி,இனயம், சின்னத்துறை, ஓடைக்கரை, வாறதட்டு, கல்லாலுமூடு, பென்னவிளை

14.8. 2024 அன்று நெடுந்தட்டு, ஆனான்விளை, ஒன்பதாம்தெங்கு, தண்டுமணி, முள்ளூர்துறை, ராமன்துறை, செறுகோல்

16 8 2024 அன்று ஆடு தூக்கி, வயக்கரை 

17.8.2024 அன்று. தைவிளை, முள்ளுவிளை, வடக்குமாதாபுரம், வாழைத்தோட்டம், வெட்டுவிளை, தாமரைகுளம், ஊசி கோடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.



#Colacheltoday #marthandam #kanniyakumari #Colachel #powercut 


சனி, 10 ஆகஸ்ட், 2024

நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து விருந்தினர் மாளிகை வரை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகம் முதல் செட்டி குளம் சந்திப்பு வரை வேலை நடைபெற்று வருவதால் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1.ஆசாரிபள்ளம், டெரிக் சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், செட்டி குளம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும்  பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு ஆசாரிபள்ளம், பால்பண்ணை சந்திப்பு,வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய சந்திப்பு, WCC , மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.

2.தோட்டியோடு ,சுங்கான்கடை, பார்வதி புரம், பால்பண்ணை,டெரிக்சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் சென்று வந்த பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு சுங்கான்கடை, பார்வதி புரம், வெட்டூர்ணிமடம், WCC வழியாக அண்ணா பேருந்து நிலையம் அல்லது வடசேரி பேருந்து நிலையம் செல்லுமாறு வழித்தடம் மாற்றம் செய்யப்படுகிறது.

3.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி வழியாக செல்லும் வாகனங்கள் பால்பண்ணை, ஹோலி கிராஸ் மருத்துவமனை, வாட்டர் டேங்க் வழியாக செல்லலாம் அல்லது ஆட்சியர் அலுவலகம், செட்டிகுளம் சந்திப்பு, கோர்ட் ரோடு வழியாக செல்லுமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

4.வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டெரிக் சந்திப்பு வழியாக ஆசாரிபள்ளம் அல்லது பார்வதி புரம் செல்லும் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மேற்கண்ட வழித்தட மாற்றம் போத்தீஸ் ரவுண்டானா பகுதி வேலை முடியும் வரை உத்தேசமாக 10.08.2024 முதல் 14.08.2024 ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட போக்குவரத்து  பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு, மாற்றத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#Traffic #Nagercoil #City #colacheltoday 

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...