குமரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2024

குமரியில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி ஒன்றிய ஆணையர் இடைநீக்கம்

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊராட்சி ஒன்றிய ஆணையர் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராகப் பணியாற்றி வருபவர் சையதுஉசேன் (46). இவர் பாலியல் தொல்லை கொடுத் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியர் அளித்த புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் விசாரணையில், அந்த அரசு ஊழியர் பாலியல் தொல்ல
ை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, சையது உசேனை இடைநீக்கம் செய்து, ஆட்சியர் ரா. அழகுமீனா புதன்கிழமை அன்று உத்தரவிட்டார்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மார்த்தாண்டம் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது; 3 பெண்கள் மீட்பு

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அடுத்த மதி ஜங்ஷனில் உள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி, சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் மசாஜ்
சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த யோபின் சாம், அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ராணிபேட்டை, திருப்புனம், தர்மபுரி பகுதியை சேர்த்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் 3பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் ______________________________________________________________________________________________ குமரி மாவட்டத்தின் இன்றைய செய்தி துளிகள்:3.9.2024 * குமரி மாவட்டம் திடல் அருகே விளை நிலங்களில் புகுந்த யானை கூட்டம். சுமார் 1300 வாழை மற்றும் 20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியது.
*மார்த்தாண்டம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

திங்கள், 2 செப்டம்பர், 2024

குமரியில் நாளை (3.9.2024) எங்கெல்லாம் மின் தடை

03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி,வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.மேலும் 03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம்,
வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.

புதன், 28 ஆகஸ்ட், 2024

குமரி: இந்திய பாஸ்போர்ட்டை சட்ட விரோதமாக எடுத்த இலங்கை அகதி கைது

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் Sri Lanka அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது

திருவட்டாரை அடுத்த வீயன்னூரில் வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் போலீசார் தேடிய நிலையில் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்த பிரபல கொள்ளையனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சனி, 24 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு நடத்தினர் அபராதம் விதிப்பு



குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரியில் கீழரத வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பெண் கடத்தி கொலை: கணவரின் தம்பிக்கு ஆயுள் தண்டனை




குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த ஜோஸ் மனைவி கவிதா . ஜோஸின் தம்பி சசிகுமார் கார் டிரைவர். 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கன்னியகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்கிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்தில் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக பலர், மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு. கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டது. இதையடுத்து எனது கல் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்குள் குவாரி அமைந்து இருப்பதாக அறிக்கை அளித்து, என்னுடைய குவாரி உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்தனர். இந்த உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரருக்கு கல் குவாரி உரிம சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்த பகுதியில் 10 வீடுகள் உள்ளன என்று 2011- ஆண்டில் வருவாய் கேட்டாட்சியர், கனிமவள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ள னர். 2015-ம் ஆண்டில் அந்த கட்டிடங்கள் அனைத்தும் பண்ணை வீடுகள்தான் என அப்போதைய கனிமவள உதவி இயக்குனர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பேரில் எந்திரத்தனமாக குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு குவாரி தொடர்ந்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகளின் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. அதேநேரம் மனுதாரரின் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் பொரு ளாதார பாதிப்பை அவர் சந்தித்து உள்ளார். அதிகாரிகள் வேண்டுமென்றே தவறு செய்ததால், மனுதாரருக்கு அவர்கள் இழப்பீட்டை வழங்குவது அவசியம். எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதார ருக்கு இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் தவறு செய்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் Insta வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை Download செய்து மேலும் பலருக்கு அனுப்பியதாக நான்கு பேர் மீதும் போக்சோ வழக்குப்பதியப்பட்டுள்ளது மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் அபினேசுக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு
சிறிது நாள் கழிந்து இருவரும் வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அபினேஷ் சிறுமியை தன்வயப்படுத்தி அவரை வீடியோ காலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அச்சிறுமி அபினேசுடன் நட்பை முறித்துக் கொள்ளவே, கோபமடைந்த அபினேஷ் தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதனை அபினேஷின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து அதனை மேலும் பலருக்கு சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

கல்லூரி பேருந்து மோதியதில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உயிரிழப்பு

கல்லூரி பேருந்து மோதியதில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சேர்ந்தவர் கபீர் இவர் மணவாளக்குறிச்சி முகுந்தன் மருத்துவமனை அருகே அப்ப கடை வைத்துள்ளார் நேற்று ஆப்ப கடைக்கு தேவையான சாதனங்களை வாங்கி வர மொபட்டில் வெள்ளி சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு சாதனங்கள் வாங்கிவிட்டு மீண்டும் மணவை பகுதிக்கு செல்ல வெள்ளிச்சந்தை டூ வெள்ளமோடி சாலையில் செனறுக்கொண்டிருந்தார் வெள்ளமோடி பக்கமாக செல்லும் போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து கபீர் ஓட்டிச்சென்ற மொபட்டை முந்தி செல்ல முயற்சித்தது. இதில் எதிர்ப்பாராமல் கல்லூரி பேருந்து மொபட் மீது மோதியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கபீரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன்  போலீசில் புகார் அளித்தார். போலீசார் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் தெருவுக்கடை காட்டுவிளையை சேர்ந்த பிரபு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .......

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

ஆழ்கடல் பகுதியில் படகில் சமையல் வேலைக்காக சென்ற மகன் மாயம்

ஆழ்கடல் பகுதியில் படகில் சமையல் வேலைக்காக  சென்ற மகன் மாயம் 

மீட்டுத் தர கேட்டு கலெக்டர் ஆபீசில்  மனு ...

நாகர்கோவில் கலெக்டர் ஆபீசில் வாராந்திர குறைதீர் முகாம்  நடைபெற்றது.  அப்போது பல்வேறு இடங்களை சார்ந்த பலரும் மனு கொடுக்க வந்திருந்தனர்.

இதில் குளச்சல் நகரைத்தை சார்ந்த ஹயறு நிஷா  என்பவர் முகாமில் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். 

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

நான் குளச்சல் காமராஜர் சாலையில்  குடும்பத்துடன் வசித்து வருகிறரேன். எனது மூத்த மகன் முகைதீன் யாசர் அலி (32) சென்ற மாதம் 4-ம் தேதி கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியில் மீன்பிடிப் படகில் சமையல் தொழிலுக்கு சென்றார். 9ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 
யாசர் அலி மாயமாகிவிட்டதாக
கொச்சி மீன் பிடி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.... தற்போது ஒரு மாதம் தாண்டியும் எனது மகன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே .மகனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என மனு அளித்திருந்தார்...

சனி, 24 அக்டோபர், 2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின் நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின்  நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020 காலை நிலவரப்படி,
****************
1)#பேச்சிபாறைஅணையின் உச்ச நீர்மட்டம் ----> 48 அடி, அணையில்தற்போதைய நீர்மட்டம்----> 44..65 அடியாக 
உள்ளது ,

**( 3.89 TMC இருப்பு உள்ளது )**

இன்று காலை நிலவரப்படி அணைக்கு  வினாடிக்கு ---->536 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்துகொண்டிருந்தது, 
பேச்சிபாறை அணையில் இருந்து வினாடிக்கு 721 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
---------------------------
2)#பெருஞ்சாணிஅணையின் உச்ச நீர்மட்டம் ----->77 அடி தற்போது அணையின் நீர்மட்டம்-----> 71.20 அடியாக நீர்மட்டம்  உள்ளது . இன்று காலை நிலவரப்படி அணைக்கு  உள்வரவாக  வினாடிக்கு ----> 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.! 

**(2.31 TMC நீர் இருப்பு உள்ளது)

 பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!
----------------------
3)#சிற்றார்- 1 அணையின் உச்சநீர்  மட்டம் ----> 18 அடி தற்போது அணையில்  நீர் மட்டம் ----> 14.79 அடியாக உள்ளது .

சி்ற்றார் -1 அணைக்கு ‌காலை நிலவரப்படி வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருக்கிறது ,

---------------------
4) #சிற்றார் -2 அணையின் உச்ச நீர்மட்டம்----> 18 அடி தற்போது அணையில் நீர்மட்டம்--->14.89 அடியாக உள்ளது.

சிற்றார்-2 அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருந்தது,
--------------------
5) #மாம்பழத்துறையாறு அணையின் உச்ச நீர்மட்டம் -----> 54.12 அடி தற்போது அணையின் நீர் மட்டம்---‌> 53.89  அடியாக உள்ளது , 

------------------
6) #பொய்கைஅணையின் உச்ச நீர்மட்டம் ----> 42.65 அடி , தற்போது அணையின் நீர் மட்டம் ----> 17.20 அடியாக உள்ளது,
------------------
7)  #முக்கடல்அணையின் உச்ச நீர்மட்டம்----> + 25  அடி தற்போது அணையின் நீர் மட்டம்----> 23.70 அடியாக உள்ளது !!

முக்கடல் அணையிலிருந்து  #நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு---> 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
---------------
8) #அப்பர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்----> 2578.8 மில்லியன் கன அடி (2.58 TMC)
தற்போது அணையில் நீர் இருப்பு ---> 2553.81 மில்லியன் கன அடி

** ( 2.55TMC) இருப்பு உள்ளது

( அணையில் 99 % நீர் இருப்பு உள்ளது)

 , இன்று காலை நிலவரப்படி அப்பர் கோதையார் அணைக்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் உள்வரவாக அணைக்கு வந்து கொண்டிருந்தது 

இன்று காலை நிலவரப்படி அப்பர் கோதையாறு அணையிலிருந்து அணையின் ஷட்டர் வழியாக  #கோதையாற்றில் வினாடிக்கு --->183 .33 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது!!

---------------------
9) #லோயர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு  திறன் ---->24.07 மில்லியன் கன அடி, தற்போது அணையில் நீர் இருப்பு 
----->21.90   மில்லியன் கன அடி

( அணையில் 87.6 % நீர் இருப்பு உள்ளது)

இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையார் அணைக்கு வினாடிக்கு உள் வரவாக 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது

இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையாறு அணையிலிருந்து  #கோதையாற்றில் வினாடிக்கு ---> 265 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
-----------------
10)#குட்டியார் 
          அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்---> 8 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு--- 8 மில்லியன் கன அடி
---------------
11)#சின்னகுட்டியார்
           அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்---> 98 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு---- > data not available !
**********
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய அணைகளான , #பேச்சிபாறை, #பெருஞ்சாணி, #அப்பர்கோதையார் ஆகிய அணைகளில் நீர் இருப்பு நன்றாக உள்ளது !

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு

இந்த பதிவு எதற்கு என்றால் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு ஆகும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் முக்கியமான இயற்கை அரண்ராக அதிலும் தென்னிந்திய அளவில் எல்லா காலகட்டத்திலும் நல்ல காலநிலை கொண்ட ஒரே மாவட்டங்கள் #கன்னியாகுமரி மற்றும் #திருவனந்தபுரம் ஆகும் இதற்கு காரணம் வடக்கிலும் & கிழக்கிலும் நமக்கு எல்லை போல உயர்ந்து நிற்கும் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும் , தென்னகத்திலே மேற்கு தொடர்ச்சி மலை முடிவு பெறும் பகுதியில்  கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான பகுதியை 6300 அடி கன்னியாகுமரி மாவட்டத்தின் அச்சன்காடு ( மாறாமலை மேல் பகுதி)  வருகிறது,  கோடையில் மழை காலத்தில்  கூட கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதியில் உருவாகும் மேகங்கள்  தான் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு சிறப்பாக மழையை அளிக்கிறது , அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையில் கூட இதமான தட்பவெப்ப நிலை , நிலையான கோடை வெப்பம் நிலவ கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டங்களை வடக்கிலும் கிழக்கிலும் சூழ்ந்து நிற்கும் இந்த உயரமான மலைகளும் அதன் அடர்ந்த காடுகளும் தான் நமக்கு காரணம் . map படம் -1 யை பார்க்கவும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவு மிகவும் பசுமை மிக்கது காரணம் நம் அரபிக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை தடுத்து மேகங்களை குவிப்பதால் நமக்கு கன்னியாகுமரி ஆரம்பித்து அனைத்து பகுதிகளிலும் சீரான மழை பரவல் கிடைக்கிறது இதனால் தான் பசுமை மிகுந்த மரங்கள் நீர்நிலைகள், மேற்கு நோக்கி பாய்ந்து நம் அரபிக்கடல் பகுதியில் கலக்கும் எண்ணற்ற ஆறுகள் பசுமையான பசுமை மாறாத புல்வெளி பரப்புகளை  காண முடியும் , கோடைகாலத்தில் , வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகமாக பெரும்பாலான நாள்கள் நம்மை சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் உயர்ந்து நிற்கும் இந்த மலை பகுதிகளில் உருவாகும் இடி மேகங்களால் தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகள் வரை மழையை கொடுக்கிறது , அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் நம் அரபிக்கடல் பகுதியில் கலப்பதால் தான் கன்னியாகுமரி , கேரளா கடலோர பகுதிகள் எல்லா காலகட்டத்திலும் மீன்வளம் மிக்க பகுதியாக பசுமையாக கடலோர பகுதிகளாக உள்ளது ,  கடலின் தட்பவெப்ப சூழல் மீன்வளத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் நமது மீனவர்களுக்கு  கூட உதவுவது இந்த மலைகளின் பங்களிப்பு தான் காரணம் ‌மேற்கு தொடர்ச்சி மலையின் பல ஆறுகள் நம் கன்னியாகுமரி ,கேரளா கடலோர பகுதிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீரை கொண்டு சேர்ப்பதால் தான் கேரளா, கர்நாடக, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் எல்லா காலகட்டத்திலும் மீன்வளம் மிக்கது  , 

பாலக்காடு இடைவெளி 29 km நீளம் கொண்டது அதனால் தான் கோவை , திருப்பூர் மாவட்டங்களின் வெப்ப அலை நேரடியாக வடக்கு  கேரளாவை பிப்பிரவரி மாதம் இறுதி முதல் மார்ச் வரை தாக்குகிறது அதனால் தான் வடக்கு கேரளாவில் கூட இந்த காலக்கட்டத்தில் பல நாள்கள் பல இடங்களில் 40°C வரை வெப்பநிலை காணப்படும் அதே போல தான் தெற்கு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் புனலூர் பகுதியில் 40°C வெப்பநிலை செங்கோட்டை இடைவெளி வழியாக கிடைக்கும் வறண்ட வெப்ப காற்றால் பிப்பரவரி இறுதி முதல் மார்ச் பகுதி வரை கிடைக்கிறது ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் நம் ஆரல்வாய்மொழி இடைவெளி வெறும் -3 km மட்டுமே இடைவெளி கொண்டது இந்த 3km இடையில் கூட ஒரு மலை 1500 அடி உயரத்தில் ஆரல்வாய்மொழி பகுதியில் நிற்கிறது இதனால் வடகிழக்கு திசையில் இருந்து மிகவும் குறைவாகவே வெப்பத்தை வடகிழக்கு திசையில் இருந்து கொண்டு வருகிறது இதனால் தான் நமக்கு கன்னியாகுமரி ,திருவனந்தபுரம் ‌மாவட்டத்தில் பிப்பிரவரி இறுதி முதல் மார்ச் பகுதி வரை கோடை வெப்பம் நிலையாக சீராக இருக்க காரணம் , நமது மாவட்டத்தை சூழ்ந்து நிற்கும் இந்த கடல் மட்டத்தில் இருந்து உயரமான மலைகளும் அடர்ந்த காடுகளும் தான் கோடையில் கூட நமக்கு வடகிழக்கு திசையில் இருந்து வரும் வறண்ட வெப்ப காற்றை தடுத்து அதன் வெப்பத்தை குறைத்து நமக்கு தருகிறது , உதாரணமாக நமது மாவட்டத்தில் இருந்து பேருந்தில் போகும் போது பலரும் கோடை காலத்தில் உணர்ந்து இருப்போம் நமது மாவட்டம் ஆரல்வாய்மொழி தாண்டியவுடன் ஒரு சூடான காற்று வீசும் அதே போல மீண்டும் நமது மாவட்டத்திற்குள் வரும் போது ஆரல்வாய்மொழி கடந்து நமது மாவட்டத்திற்குள் வந்த உடன் இதமான சூழல் காணப்படுவதும் இந்த இயற்கை கட்டமைப்பு கடல் மட்டத்தில் இருந்து மிக உயர்ந்த நமது மலைகள் தான் இதனால் தான் கன்னியாகுமரி மாவட்டம் , கேரளா எல்லாம் கடும் கோடை காலத்தில் கூட 40, 45°C தொடர் வெப்பம் அனல் காற்றை சந்தித்த வரலாறே கிடையாது , அதுபோல கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் , கடுமையான காட்டு தீ போன்ற பாதிப்பு எதுவும் கிடையாது , எல்லா காலகத்திலும் ஈரப்பத்தை 75% முதல் 100% வரை தக்கவைத்து கொள்வதற்கு நமது இந்த இயற்கை அரண் அமைப்பு மிக முக்கியமான ஒன்றாகும் தமிழகத்தில் நீலகிரி ‌மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக 32.5% காடுகளையும் ‌,நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக மழை பொழிவு மற்றும், அதிக அணைகளையும் கன்னியாகுமரி மாவட்டம் மலை தொடர்கள் பெறுகிறது , நமது மாவட்டத்தில் மட்டும் 11 அணைகள் உள்ளது , 30 மேற்பட்ட அருவிகள் உள்ளது , இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மலைகளையும் காடுகளையும் ‌மிகவும் பாதுகாப்பது அவசியம் ஆகும் , இன்னொரு விஷயம் நமது மாவட்டம் முழுவதும் மரங்களையும் தற்போது இருப்பதை போல போணி காக்க வேண்டும் , 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது முழு நேர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் கடல் மீனவர் அல்லது மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் இந்திரா குடியிருப்பு திட்ட வழிமுறைகளின் அடிப்படையில் 5 ஆயிரம் வீடுகளை மொத்தம் ரூ.85 கோடியில் கட்ட தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கு 700 வீடுகள் கட்டி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், முழு நேர மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் நாகர்கோவிலில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மீனவர் பெயரில் வேறு எங்கும் கான்கிரீட் அல்லது நிரந்தர வீடுகள் இல்லாத, தங்களது பெயரில் நிலத்திற்கான பட்டா உள்ள மற்றும் அரசின் வேறு எந்த வீட்டு வசதி திட்டத்திலும் பயனடைந்திராத மீனவராக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...