செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

தக்கலையில் கணவனை விட்டுட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்

 தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள  காதலனுடன் சென்ற இளம்பெண்


தக்கலை பகுதியை சேர்ந்த 34 வயதான வாலிபர் வருவர் கொத்த வேலை செய்து வருகிறார் இவருக்கும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த  ஆரப்பாளையம் ஊரை  சேர்ந்த இருபது வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, தற்போது ஒன்றரை வயதில் குழந்தையும்  உள்ளது.


இந்தநிலையில் அந்தப் பெண் கோபித்துக் கொண்டு கடந்த மாதம் 27ஆம் தேதி குழந்தையுடன் ஆரப்பாளைம் சென்று விட்டார். ஆரப்பாளைம் சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்ப நடத்த கடந்த 3-ம் தேதி கணவர் ரயில் மூலமாக அழைத்து வந்த போது, அந்தப் பெண் குழந்தையுடன் மாயம் ஆகியுள்ளார்



இது தொடர்பாக கணவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார்  இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


பெண்ணின் மொபைல் போன் சிக்னல் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் வெள்ளிச்சந்தை பகுதியில் கள்ளக்காதலன் ஒருவருடன் வசித்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது


பின்னர்  போலீசார் அந்த பெண்ணை தக்கலை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து நடத்திய விசாரணையில் கணவருக்கு மதுபழக்கம் அதிகமாக உள்ளதால் அவரோடு வாழ முடியாது என்று கூறி கள்ளக்காதலனுடன் செல்வதாக அப் பெண் கூறி உள்ளார்.


ஆனால் போலீசார், கணவர் இருக்கும் போது கள்ளக்காதலுடன் செல்ல முடியாது என எச்சரித்தனர் ,அந்த பெண்ணை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பெண்ணின் கணவரும் கள்ளக்காதலனும் திரும்பி ஏமாற்றத்துடன் சென்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...