குமரி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமரி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 2 செப்டம்பர், 2024
குமரியில் நாளை (3.9.2024) எங்கெல்லாம் மின் தடை
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை,
வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி,வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.மேலும்
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம்,வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் அறை எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 2 சிறுமிகள் உள்பட 4 பேரையும் மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்
சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் நான்கு பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பத இரண்டு சிறுமிகளும், சிறுவனும் 17 வயதுடையவர்கள் என்பதும் இவர்கள் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களுடன் இருந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்றும் அவரது பெயர் சந்தீஷ்குமார் (வயது 22) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் காதல் ஜோடி என
போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சந்தீஷ்குமார், லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் (62), மேலாளர் சிவன் (54) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் 17 வயது சிறுவனையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதில் லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடலில் பலத்த காற்று: படகில் தவறி விழுந்த தூத்தூர் மீனவர் பலி
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (50). மீன்பிடி
தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை பூத்துறை என்ற பகுதியை சேர்ந்த ஜோன் பிராய்
என்பவருக்கு சொந்தமான படகில் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க
சென்றார்.
இவருடன் ஜான் உட்பட எட்டு மீனவர்கள் உடன் இருந்தனர். நேற்று அதிகாலையில் ஆழ்கடல்
பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆழ்
கடலில் பலத்த காற்று வீசி உள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் ஷாஜி படகின் உள்ளே
விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே
உயிரிமந்துள்ளார். சக மீனவர்கள் ஷாஜியின் உடலை தேங்காபட்டணம் மீன்பிடித்
துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குளச்சல்
கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதன், 21 ஆகஸ்ட், 2024
சிறுமி மாயம் குமரி ரயில் நிலையங்களில் தேடுதல்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். சென்ற மாதம் குடும்பத்துடன் திருவனந்தபுரம் வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் 13 வயதான தஸ்மிக் தம்சம் என்ற மகள் உட்பட 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அன்வரும் மனைவியும் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தஸ்மீ க் தம்சத்தை வீட்டில் இருந்து காணவில்லை. இது குறித்து அன்வர் உசேன் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தஸ்மிக் திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில்
கன்னியாகுமரி ரயில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்தது. அவர் ரயிலில் இருப்பது போன்ற ஒரு போட்டோ போலீசில் கிடைத்தது.தொடர்ந்து கழக்கூட்டம் போலீசார் இன்று கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்
அதன் பேரில் இன்று காலையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீசார் வந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் சிறுமியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். மேலும் தொடர்ந்து கேரளா போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
குளச்சலில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை
தூத்துக்குடி பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அலோசியஸ் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக் (17) தக்கலை அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார். அடுத்த வாரம் கல்லூரி திறக்க உள்ள நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற ஏக்கத்தில் ஜாக்சன் டியூக் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு ஜாக்சனின் பள்ளி தோழி ஒருவர் அஜீஸ் ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜாக்சன் தன்னிடம் வீடியோ காலில், கல்லூரி கட்டணம் செல்ல முடியாததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அழைப்பை துண்டித்ததாக கூறியுள்ளார்.
தாயார் அறையில் சென்று பார்த்த போது, அறை பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ஜாக்சன் இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து
குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதன், 14 பிப்ரவரி, 2024
கன்னியாகுமரி அருகில் ஸ்கூல் வாகனம் மோதி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி அருகில் ஸ்கூல் வாகனம் மோதி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி அருகில் லீபுரத்தை சேர்ந்தவர் வேதராஜமணி(58). திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.தேங்காய்கள் வெட்டும் வேலை செய்து வருகின்றார் வேதராஜமணி ,நேற்று சாயாங்காலம் பஞ்சலிங்கபுரத்தில் இருந்து நரிகுளம் மேம்பாலம் வழியாக கன்னியாகுமரி செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார் வேதராஜமணி அப்போது
நரிக்குளம் மேம்பாலத்தில் திரும்பும் சமயத்தில் அஞ்சுகிராமத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக, அருண் (38)என்பவர் ஓட்டி வந்த ஸ்கூல் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், வேதராஜமணி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படு காயங்களோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் விபத்து குறித்து கன்னியகுமரி போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்
வியாழன், 3 செப்டம்பர், 2020
நாளைய மின்தடை அறிவிப்பு
நாளைய மின்தடை பற்றிய அறிவிப்பு:
இரணியல் மின்வாரிய உதவி பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பராமரிப்பு பகுதிக்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் ரயில்வே கிராசிங்கில் புதிதாக புதைவடம் இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியும் , பராமரிப்பு பணியும் நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குதிரை பந்திவிளை , வடக்கு நுள்ளிவிளை , மணக்கா விளை , ஐந்துபுளிமுட்டு கிராமம் , நுள்ளிவிளை ஆர்.சி சர்ச் சமீபம் , துவரவிளை , ஐக்கியபுரம் , வீராணி , வர்த்த நாயன்குடி , ஆளூர் , கலந்தர்நகர் , பள்ளி தெரு , ஸ்ரீகிருஷ்ணபுரம் , செக்காரவிளை , ஆதி காங்கேயன்விளை , காட்டுவிளை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
----------------------------------------------------------------
தொடர்ந்து இணைந்திருங்கள் குளச்சல் டுடே - வுடன் ....
#Powercut #Kanniyakumari
புதன், 26 ஆகஸ்ட், 2020
இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...
இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...
தேங்காய்பட்டணம் மீன்பிடி ஹார்பாருக்கு செல்ல தாமிரபரணி ஆற்றின் கரையோரம் புதிதாக ரோடு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இரையுமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பொதுமக்கள் இரையுமன்துறை தேவலாயம் முன்பு கூடாரம் அமைத்து நேற்று முன் தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர்
உண்ணாவிரதத்த போரட்டத்துக்கு அனுமதி கொடுக்கபடாத நிலையில் ஆண்கள் , பெண்கள் என்று பல பேர் கலந்து கொண்டனர் . தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தினர் . இதில் முடிவுகள் ஏற்படாததால் இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடந்தது .
2 வது கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாததால் , நேற்று 2 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது . நேற்றும் ஏராளமான ஆண்களும் , பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன் ( 48) , லீலஸ் ( 47 ) , பிறடி ( 54 ) ஆகிய மூன்று பேர் நேற்று மதியம் மயக்கமடைந்தனர் .
அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் கொடுக்கப்பட்டது .
#Thengapattanam #kanniyakumari
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020
25 ஆம் தேதி மின் தடை பற்றிய அறிவிப்பு
மின்தடை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
மீனாட்சிபுரம் , தெங்கம்புதூர் , கன்னியாகுமரி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 25 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது .
இதனால் வடிவீஸ்வரம் , கோட்டார் , கணேசபுரம் , இடலாக்குடி , ஒழுகினசேரி , தளியபுரம் , ராஜபாதை , கரியமாணிக்கபுரம் , செட்டிக்குளம் சந்திப்பு , சரலூர் , ராமன் புதூர் சந்திப்பு , இந்துக்கல்லூரி , வேதநகர் , தெங்கம்புதூர் , பறக்கை , ஐஎஸ் இடி , மேலமணக்குடி , முகிலன்விளை , மணிக்கட்டிப்பொட்டல் , ஒசரவிளை , காட்டுவிளை , புதூர் , ஈத்தாமொழி , தர்மபுரம் , பழவிளை , பொட்டல் , வெள்ளாளன்விளை , மேலகிருஷ்ணன்புதூர் , பள்ளம் , பிள்ளையார்புரம் , புத்தளம் , புத்தன்துறை , கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , வழுக்கம்பாறை , கீழ மணக்குடி , அழகப்பபுரம் , சுசீந்திரம் , கொட்டாரம் , சாமித்தோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக்கோட்டுப்பொத்தை , வாரியூர் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது .
#Kanniyakumari #Powercut #Colacheltoday
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...