குலசேகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குலசேகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 10 செப்டம்பர், 2024
சர்வதேச மகளிர் வாள்போட்டி கன்னியாகுமரி மாவட்ட மாணவி பங்கேற்பு
சர்வதேச மகளிர் வாள் விளையாட்டுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த என். வி ஜெனிஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அவருடன் மேலும் ஆறு பேர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர்.
ஜெனிஷா 12-ம் வகுப்பு மாணவியாவார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் சார்பில் ஆற்றூர் அடுத்த கல்லுப்பாலம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவியை கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக தலைவர் சிந்துகுமார், செயலாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் செல்வகுமார் உட்பட பலர் பாராட்டி உள்ளனர்.
சனி, 7 செப்டம்பர், 2024
மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி
மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
குலசேகரம் அடுத்த பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவருக்கு சரிகா என்ற மனைவி, தியா , தீரஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் திருவனந்தபுரத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜேஷ் தனது மகன் தீரஜ் - டன் அந்தப் பகுதியில் உள்ள புத்தன்குளம் என்ற குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர் தீரஜ் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து அப்பாவை காணவில்லை என தாயிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட சரிகா அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு குளத்திற்கு சென்றார். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடிய போது, இறந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...