கன்னியாகுமரி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னியாகுமரி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 செப்டம்பர், 2024

குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வில்லிவிளையைச் சேர்ந்தவர் டெம்போ டிரைவர் முருகேசன் (52). இவர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் முருகேசனை தேடி வந்த நிலையில், நேற்று (செப்.,13) ஈத்தாமொழியில் வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். _____________________________________________________________________________________________ செய்தி துளிகள்: குமரி மாவட்டம் திங்கள் நகர்: மினிபேருந்து ஓட்டுநர்-பேரூராட்சி ஊழியர் மோதல் திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மினி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது. இதற்கு பேரூராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும் மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். _____________________________________________________________________ _________________________ கைது செய்யப்பட்ட துணை சர்வேயருக்கு நீதிமன்ற காவல் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட கிள்ளியூர் தாலுகா துணை சர்வேயர் சிறையில் நேற்று(செப்.13) அடைக்கப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் (பொறுப்பு) நீதிபதி உத்தரவிட்டார். நில அளவை செய்வதற்காக லஞ்சம் வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். _______________________________________________________________________________________________ குமரி அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு குமாரபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன் இவர் சித்திரங்கோட்டில் மகள் வீட்டில் இருந்தார். மகளின் மகன் ராஜசேகருக்கு சொந்தமான காரை 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் போர்டிகோவில் ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி வைத்திருந்தார். 12ம் தேதி கார் உருண்டு முத்தையன் மீது மோதியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்
this

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு பூப்பது வழக்கமாகும். அதன்பின் அந்த மரத்தின் வாழ்வு முடிந்து விடும். பனை மரம் பூத்துக் குலுங்குவதை ஏராளமானோர் அபூர்வமாக பார்த்துச் செல்கின்றனர்

ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டி வரப்பட்ட கனிம வள லாரி ரூ.15000 அபராதம் விதித்து பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், இன்று 07.09.2024 ம் தேதி, நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் வடசேரியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, இரவு 10 மணிக்கு முன்பே நகர்ப்பகுதிக்குள் இயக்கப்பட்ட கனரக லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமம் இன்றி கனிமவள லாரியை
இயக்கிய மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு ரூ.10000 அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு லாரியை ஓட்ட அனுமதி அளித்த லாரி உரிமையாளருக்கு ரூ.5000 அபராதமும் ஆக மொத்தம் ரூ.15000 அபராதம் விதித்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சிலை

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இந்த பாலகம் முன்பு இன்று (செப்.,6) காலை ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலை ஒன்று இருந்தது. இதைப் பார்த்த அங்குள்ள ஊழியர்கள் நேசமணி நகர்
போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விநாயகர் சிலையை அங்கு வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த விநாயகர் சிலையை இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி உள்ளதாக தெரிய வந்தது. அவர் அந்த விநாயகர் சிலையை நேற்று (செப்.,5) ஆவின் பாலகத்திற்கு வெளியே வைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு அந்த சிலையை எடுக்க மறந்து சென்று விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. உடனே சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். அவர் விநாயகர் சிலை வாங்க வருவதாக கூறினார். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த சிலையை உடனடியாக அங்கிருந்த மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் விநாயகர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...