Nagercoil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nagercoil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஆகஸ்ட், 2024

நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து விருந்தினர் மாளிகை வரை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகம் முதல் செட்டி குளம் சந்திப்பு வரை வேலை நடைபெற்று வருவதால் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1.ஆசாரிபள்ளம், டெரிக் சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், செட்டி குளம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும்  பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு ஆசாரிபள்ளம், பால்பண்ணை சந்திப்பு,வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய சந்திப்பு, WCC , மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.

2.தோட்டியோடு ,சுங்கான்கடை, பார்வதி புரம், பால்பண்ணை,டெரிக்சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் சென்று வந்த பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு சுங்கான்கடை, பார்வதி புரம், வெட்டூர்ணிமடம், WCC வழியாக அண்ணா பேருந்து நிலையம் அல்லது வடசேரி பேருந்து நிலையம் செல்லுமாறு வழித்தடம் மாற்றம் செய்யப்படுகிறது.

3.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி வழியாக செல்லும் வாகனங்கள் பால்பண்ணை, ஹோலி கிராஸ் மருத்துவமனை, வாட்டர் டேங்க் வழியாக செல்லலாம் அல்லது ஆட்சியர் அலுவலகம், செட்டிகுளம் சந்திப்பு, கோர்ட் ரோடு வழியாக செல்லுமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

4.வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டெரிக் சந்திப்பு வழியாக ஆசாரிபள்ளம் அல்லது பார்வதி புரம் செல்லும் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மேற்கண்ட வழித்தட மாற்றம் போத்தீஸ் ரவுண்டானா பகுதி வேலை முடியும் வரை உத்தேசமாக 10.08.2024 முதல் 14.08.2024 ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட போக்குவரத்து  பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு, மாற்றத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#Traffic #Nagercoil #City #colacheltoday 

சனி, 3 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் வயநாட்டில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாடு பகுதிகளான மேப்பாடி,சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 350 க்கு மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்,
அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்,மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸார் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர், இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர், வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதில் முதல் நபராக,காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#wayanad #Colacheltoday #nagercoil

வியாழன், 18 ஜூலை, 2024

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஆடி மாத பிறப்பை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது- நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர்- மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 400க்கும்,பிச்சி பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது


பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் உற்பத்தி பெருகி உள்ளதாலும் ஆடி மாதம் எதிர்பார்த்த விலை உயர வில்லை,இன்னும் நாட்கள் செல்லச் செல்ல பூக்களின் விலை உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்- இதில் அரளிப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் 125 ரூபாய்க்கும், வாடாமல்லி 40 ரூபாய்க்கும்,சிவப்பு கிரேந்தி 60 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ 20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த வண்ண பூக்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 5 ஜூலை, 2024

போலீசாரின் வாகன தணிக்கையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.



குமரி மாவட்டம் நாகர்கோவில் to கணேசபுரம் சாலையில் இன்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்,

அப்போது அந்த வழியாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஒட்டியது,முறையான பதிவு எண் இல்லாமல் வாகனம் ஒட்டியது,ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது என விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களின் வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

#nagercoil #kanniyakumari #colachel

வெள்ளி, 3 ஜூலை, 2020

அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம்.....

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த அனைத்து வியாபாரிகளுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.....

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்திய பிறகும்
வடசேரி சந்திப்பில்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம் செய்ததால் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர்...

மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்......

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...