COLACHEL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COLACHEL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஆகஸ்ட், 2024

குளச்சல் துறைமுகம் ரூ. 300 கோடியில் விரிவாக்கம் :கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா,  நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- ரூ. 300 கோடி மதிப்பீட்டில் குளச்சல் மின்பிடித்துறைமுக விரிவாக்கம் அமையவுள்ள இடம் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டதோடு, அதன் திட்ட விளக்கம் கேட்டறியப்பட்டது. மேலும், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தி மீன்விற்பனை செய்யவும், மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தவும் போதிய இடவசதியினை ஏற்படுத்தி தர குளச்சல் மீன்பிடித்துறைமுக பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்
அக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குளச்சல் புனித மரியன்னை தொடக்க பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் அருகாமையில் அமைந்துள்ள பனை வெல்ல கூட்டுறவு சங்கம் பயன்படுத்தபடாத இடத்தினை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திட பொது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து, அதற்கான இடத்தினை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மா. சின்னகுப்பன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குமரி மாவட்டம்..

குளச்சல் நகர பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு.... 

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குளச்சல் ,சைமன்காலணி,கோடிமுனை ,வாணியகுடி ,குறும்பனை ,கொட்டில்பாடு  ஆகிய‌ பகுதி மீனவ கிரமாங்களில் வாழும் மக்களுக்கு  எச்சரிக்கை பதிவு தயவு செய்து அரசும் அரசு அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்துவதை தயவு செய்து கேட்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மிகவும் மிதவும் கொடியை நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்களுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது ஆகையால் பொதுமக்கள் ஆகிய‌ நாம் தான்  சமூக இடைவெளியை கடைபிடித்தும் , வெளியில் வரும் பொதும் முககவசம் அணிந்தும் நடக்க வேண்டும்‌ என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.....

தனித்திருப்போம்‌..
தேசத்தை காப்போம்....

ஞாயிறு, 17 மே, 2020

குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் காமராஜர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மழை காரணமாக சாஸ்தான்கரையில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக கார், டெம்போ போன்ற வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுமரங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மழை, காற்று காரணமாக கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கட்டுமரங்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.



ஞாயிறு, 10 மே, 2020

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் பலி:

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு



விசாகப்பட்டினத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 11 பேர் இறந்தனர். இதுபோல், அவுரங்கபாத்தில் ரெயிலில் அடிபட்டு 15 தொழிலாளர்கள் பலியாயினர். இந்த சம்பவங்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். குமரி மாவட்ட லெனினிஸ்டு செயலாளர் அந்தோணிமுத்து ரீத்தாபுரத்தில் உள்ள தனது வீட்டில் கருப்பு கொடியேந்தி துக்கம் அனுசரித்தார்.


வியாழன், 16 ஏப்ரல், 2020

குளச்சலில் உணவு கிடைக்காமல் அலையும் குரங்கு வீட்டுக்குள் புகுந்து பழங்களை தின்றது

குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெரிய குரங்கு ஒன்று அலைந்து திரிந்து வருகிறது . பகல்வேளையில் சிறுபெட்டிகடை , பழக்கடைகளில் புகுந்து பசி தீர்க்கும் அந்த குரங்கு இரவு அண்ணாசிலை சந்திப்பில் உள்ள ஆலமரத்தில் தங்கும் . 
தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த குரங்கு உணவுகிடைக்காமல் குளச்சல் பகுதியில் அலைந்து திரிந்து வருகிறது . நேற்று மதியம் காமராஜர் சாலையில் இந்த குரங்கு புகுந்தது . 

பின்னர் அங்குள்ள வீடுகள் மரங்களில் தாவி தாவி உணவு ஏதாவது கிடைக்குமா ? என அங்குமிங்கும் திரிந்தது . ஒரு சிறுமி ஆர்வ மிகுதியில் வீட்டிலிருந்து வாழைப்பழம் எடுத்து வந்து குரங்கு முன் வைத்தார் . அதை சாப்பிட்டு முடித்த குரங்கு அதே வீட்டுக்குள் புகுந்து அங்கு மீதியிருந்த வாழைப்பழங்கள் ,டிபனை  எடுத்து வெளியே கொண்டு வந்து சாப்பிட்டு  விட்டு சென்றது. இந்த காட்சிகளை சிறுவர் முதல் பெரியவர்வரை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் வீட்டுக்குள் குரங்கு புகுந்ததால் மீண்டும் மீண்டும் குரங்கு வருமா ? என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் . எனவே உணவின்றி தவிக்கும் இந்த குரங்கை வனத்துறையி னர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என பொதுமக்கள் வலிவுறுத்தி உள்ளனர் .

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...