kanyakumari லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kanyakumari லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மின் தடை அறிவிப்பு

தக்கலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 

சேரமங்கலம் , செம்பொன்விளை , முட்டம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . 
நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேரமங்கலம் , அழகன்பாறை , கருமண்கூடல் , மண்டைக்காடு , லெட்சுமிபுரம் , நடுவூர்கரை , ஐ.ஆர்இ , பரப்பற்று , கூட்டு மங்கலம் , புதூர் , மணவாளக்குறிச்சி , பிள்ளையார்கோவில் , கடியப்பட்டணம் , அம்மாண்டிவிளை , வெள்ளமோடி , வெள்ளிச்சந்தை , முட்டம் , சக்கப்பத்து , ஆற்றின்கரை , சாத்தன் விளை , ஆலன் விளை , திருநைனார்குறிச்சி , குருந்தன்கோடு , கட்டிமாங்கோடு , செம்பொன்விளை , திக்கணங்கோடு , தெங்கன்குழி , மத்திகோடு , சாஸ்தான்கரை , சேனம்விளை , கொட்டில்பாடு , சைமன்காலனி , கீழக்கரை , குளச்சல் , மிடாலக்காடு , பிடாகை , கோடிமுனை , ஆலஞ்சி , குறும்பனை , வாணியக்குடி , பத்தறை , குப்பியன்தறை , பாலப்பள்ளம் , திங்கள்நகர் , இரணியல் , கண்டன்விளை , நெய்யூர் , பட்டரிவிளை , தலக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது .....

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நாகர்கோவில், கருங்கல் பகுதிகளில் 28 இல் மின்தடை



நாகர்கோவில் பகுதியில் 28 இல் மின்தடை 

நாகர்கோவில் நகரப் பகுதியில் செவ்வாய்க் கிழமை ( ஜூலை 28 ) மின்தடை செய்யப்படுகிறது . இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

நாகர்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 28 ) நடைபெற உள்ளதால் , அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வல்லன்குமாரன்விளை , தடிக்காரன்கோணம் , வடசேரி , ஆசாரிப்பள்ளம் துணை மின் நிலைய பகுதிகளிலும் , அதைச் சார்ந்துள்ள நாகர்கோவில் நகர்ப்பகுதி , பெருவிளை , சுங்கான்கடை வடசேரி கிருஷ்ணன் கோவில் , எஸ்.எம்.ரோடு , கல்லூரிச் சாலை , நீதிமன்றச் சாலை , கே.பி.ரோடு , பால்பண்ணை , நேசமணிநகர் , தோப்பூர் , வேம்பனூர் , அனந்தன்நகர் , பார்வதிபுரம் , புத்தேரி , இறச்சகுளம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ....
_________________________________________



குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட கருங்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்  (செவ்வாய்க்கிழமை ) நடக்கிறது . எனவே , அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருங்கல் , பாலூர் , திப்பிறமலை , பூட்டேற்றி , கொட்டேற்றிகடை , தெருவுகடை , செந்தறை , மேல்மிடாலம் , மிடாலம் , நட்டாலம் , எட்டணி , இடவிளாகம் , பள்ளியாடி , பாரக்கடை , குழிக்கோடு , முருங்கவிளை , செல்லங்கோணம் , முள்ளங்கினாவிளை , கஞ்சிக்குழி , கருமாவிளை , படிவிளை , மானான்விளை , பெருமாங்குழி , ஓளிப்பாறை , மீறி , கல்லடை , ஹெலன்காலனி மற்றும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது . இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் .....


#ColachelToday
#Kanyakumari
#Powercut

சனி, 25 ஜூலை, 2020

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அம்ல்படுத்த திமுக கோரிக்கை

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அமல்படுத்த திமுக கோரிக்கை


குமரி மேற்கு மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் எம்.எஸ் பப்புசன் விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது : குழித்துறை நகராட்சி நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மிக பெரிய வணிக பகுதியாகும் . மிக பெரிய காய்கறி சந்தை , மீன் ஏல சந்தை , மிகப் பெரிய மால்கள் , வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய பகுதியாகும் . தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர் . 
கடந்த இரண்டு வார கால மாக குழித்துறை நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வேகமாக பரவவருகிறது . பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுக்க முடியாமல் வறுமையில் உள்ளனர் . மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குழித்துறை அரசு மருத்துவமனையில் கொரோன பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் . குழித்துறை நகராட்சி பகுதில் சங்கிலி தொடர்பு தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதற்கு குழித்துறை நகராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்படுள்ளது 

#குழித்துறை #குமரி

செவ்வாய், 14 ஜூலை, 2020

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் , நாகர்கோவில் பத்திரிக்கை செய்தி



14.07.2020 

✷காய்ச்சல் , இருமல் , சளி , மூச்சு விடுவதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் . வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . கொரோனா நோய் பரவலை தடுக்க , பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

✷கொரோனா பரவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கருதி 01.07.2020 அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் ( ஹோட்டல்களும் மருந்து கடைகளும் தவிர்த்து ) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது . தொடர்ந்து அவ்வாறே அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்படும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . • 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவிட் கவனிப்பு மையங்களில் ( Covid Care Centre ) நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் மருத்துவ சிகிச்சையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன . 

✷முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 60 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 6000 வசூலிக்கப்பட்டது . 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 62059 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . .

✷தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 572 பேர் சிகிச்சையில் உள்ளனர் . • 

✷ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 721 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . -

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 4437 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4942 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . 

✷  ஊரடங்கு உத்தாவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6341 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ...

#Colacheltoday
#Kanniyakumari
#Kanyakumari
#Nagercoil

செவ்வாய், 30 ஜூன், 2020

மாவட்ட ஆட்சித்தலைவரின் இன்றைய செய்திக்குறிப்பு


☞  05.07.2020 , 12.07.2020 , 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும் .

☞ அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 01.07.2020 முதல் 15.07.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது .

☞   கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் , தளர்வுகளும் 31.07.2020 நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது .

☞ மாவட்டத்திற்குள் இ - பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் .

☞ வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும் , வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும் , மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் , இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் .

☞ கொரோனா பரவல் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது , அதன்படி நாளை ( 01.07.2020 ) முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

☞ கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் எண்ணிக்கையில் வரும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அருகில் ஆறு இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

☞ கொரோனா பரிசோதனைக்காக மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும்போது பொதுமக்கள் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது .

☞ பரிசோதனையை தவிர்க்கும் விதத்தில் பொதுமக்கள் செயல்பட்டால் உண்மையாக மறுக்கப்பட்டவர்கள் விபரம் தெரியாத நேர்வுகளில் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . -

☞ முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 225 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 22500 வசூலிக்கப்பட்டது .

☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 44866 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

☞தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 225 பேர் சிகிச்சையில் உள்ளனர் .

☞ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 206 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . 

☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 1797 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 6816 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .

☞  ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் வாரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6318 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .

- மாவட்ட ஆட்சித்தலைவர் , கன்னியாகுமரிமாவட்டம் .

#Colacheltoday

வெள்ளி, 29 மே, 2020

குமரி மாவட்டசெய்தி துளிகள் சில


✓அஞ்சுகிராமத்தில் கட்டப்பட்டுள்ள
ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

✓குமரியில் +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

✓குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

✓புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார் .

வியாழன், 21 மே, 2020

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


தாழக்குடி மேலகாலனி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி தாசம்மாள் (44). சம்பவத்தன்று தாசம்மாள் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் தாசம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசம்மாள், பாஸ்கரனின் தந்தை கிறிஸ்துதாஸிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் தாசம்மாள் தரப்பினரும், கிறிஸ்துதாஸ் தரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாசம்மாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிறிஸ்துதாஸ், அவருடைய மனைவி மார்த்தாள், மகன்கள் பாஸ்கர், சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல கிறிஸ்துதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், அவருடைய மனைவி தாசம்மாள், மகன்கள் சாருஹாசன், சுனில் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 18 மே, 2020

தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை



குலசேகரம் அருகே நாகக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27), ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐஸ்வர்யா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு



திருவட்டார் அருகே செறுகோல் குற்றிமாவிளையில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. நேற்று காலையில் ஆலயத்தை சுத்தம் செய்வதற்காக சபை பணியாளர் ராபின் சென்றார். அப்போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, ஆலயத்தின் பின்பக்கத்தில் உள்ள அறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற மின்சார பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மூடை கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்களை மர்ம நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். மேலும், சில பொருட்களை மூடை கட்டி விட்டு கொண்டு செல்ல முடியாததால் அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சபை செயலாளர் சிம்சோன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



வெள்ளி, 15 மே, 2020

விபத்தில் 2 பேர் காயம்



இரணியல் அருகே நெய்யூர் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் மோட்டார் சைக்கிளில் மேக்கா மண்டபத்தில் இருந்து அழகியமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

பின்னால் அவர் நண்பர் ரவீந்திரன் உட்கார்ந்து இருந்தார். பிலாங்காலை பகுதியில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன், ரவீந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தக்கலை மணலி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




வியாழன், 14 மே, 2020

மார்த்தாண்டம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது



மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 38), தொழிலாளி. இவர், 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை தேடி வந்தனர். இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரெஜியை கைது செய்தனர்.

செவ்வாய், 12 மே, 2020

குமரி மாவட்டத்தில் நடைபெறும்கொரோனா தடுப்பு பணிகளுக்கு முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு





குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு தடுப்பு பணிகளை செய்து வரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். கொரோனா வைரசுடன் போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும், வைரஸ் மக்களை தாக்காமல் இருக்க உழைக்கும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




திங்கள், 11 மே, 2020

திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை



மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 38). கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே விஜயகுமார் கடன் வாங்கி வீடு கட்டினாராம். இதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





ஞாயிறு, 10 மே, 2020

நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை



நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கை கழுவுதல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ஓவிய கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளோம். இந்த ஓவியங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கொரோனா பாதிப்பு தற்போது முடியக் கூடியதாக இல்லை. எனவே மக்களின் விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவே தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதோடு மரத்தில் ஆணி அடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில் விளம்பர நோட்டீஸ் அச்சடித்து வினியோகம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 8 மே, 2020

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிளசட் சேம், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எமி கிராம்டா. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உடையார்விளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்ப வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

வியாழன், 7 மே, 2020

முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில்1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நோன்பை முன்னிட்டு முதல் கட்டமாக 1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்கான பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைவர் இப்ராகீம்கான், பொதுச்செயலாளர் பி.ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசைன், துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.ஆர்.ஹாஜிபாபு, இளைஞர் அணி தலைவர் அயூப்கான், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஜாகிர், சேக் முகமது, பசுலுல் கரீம், நவாஸ், சலீம், சேக் உள்பட அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி மீது தாக்குதல்



ஆரல்வாய்மொழி அருகே திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), டெம்போ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் அவரது மனைவி ராதிகா ஆகியோர் மோதலை விலக்கி விட சென்றனர்.
அப்போது, கார்த்திக்கும் அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து ‘ இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நீங்கள்தான்’ எனக்கூறி கண்ணனையும் அவரது மனைவியையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் கள்ளக்காதலி மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதன், 6 மே, 2020

சென்னையில் இருந்து வந்தவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

சென்னையில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் நபர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சளி, ரத்தம் மாதிரி எடுத்த பிறகு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈசாந்திமங்கலத்தில் ஒரு வீடு, பூதப்பாண்டியில் 2 வீடு, திட்டுவிளையில் 2 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, அங்கு 8 பேர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது




கருங்கல் அருகே நேராகாட்டுவிளையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை செய்த போது பிரபின் ஆன்டனி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து பிரபின் ஆன்டனியை போலீசார் கைது செய்து 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

திங்கள், 4 மே, 2020

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் சார்பில் முக கவசம் வினியோகம்

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் 

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜமணி தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், கிரீசன் ஆகியோர் முன்னிலையில் 250 முக கவசங்கள் கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாளிடம் வழங்கப்பட்டது. போலீசார், அந்த முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.



தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...