சனி, 24 அக்டோபர், 2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின் நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின்  நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020 காலை நிலவரப்படி,
****************
1)#பேச்சிபாறைஅணையின் உச்ச நீர்மட்டம் ----> 48 அடி, அணையில்தற்போதைய நீர்மட்டம்----> 44..65 அடியாக 
உள்ளது ,

**( 3.89 TMC இருப்பு உள்ளது )**

இன்று காலை நிலவரப்படி அணைக்கு  வினாடிக்கு ---->536 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்துகொண்டிருந்தது, 
பேச்சிபாறை அணையில் இருந்து வினாடிக்கு 721 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
---------------------------
2)#பெருஞ்சாணிஅணையின் உச்ச நீர்மட்டம் ----->77 அடி தற்போது அணையின் நீர்மட்டம்-----> 71.20 அடியாக நீர்மட்டம்  உள்ளது . இன்று காலை நிலவரப்படி அணைக்கு  உள்வரவாக  வினாடிக்கு ----> 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.! 

**(2.31 TMC நீர் இருப்பு உள்ளது)

 பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது!
----------------------
3)#சிற்றார்- 1 அணையின் உச்சநீர்  மட்டம் ----> 18 அடி தற்போது அணையில்  நீர் மட்டம் ----> 14.79 அடியாக உள்ளது .

சி்ற்றார் -1 அணைக்கு ‌காலை நிலவரப்படி வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருக்கிறது ,

---------------------
4) #சிற்றார் -2 அணையின் உச்ச நீர்மட்டம்----> 18 அடி தற்போது அணையில் நீர்மட்டம்--->14.89 அடியாக உள்ளது.

சிற்றார்-2 அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 14 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருந்தது,
--------------------
5) #மாம்பழத்துறையாறு அணையின் உச்ச நீர்மட்டம் -----> 54.12 அடி தற்போது அணையின் நீர் மட்டம்---‌> 53.89  அடியாக உள்ளது , 

------------------
6) #பொய்கைஅணையின் உச்ச நீர்மட்டம் ----> 42.65 அடி , தற்போது அணையின் நீர் மட்டம் ----> 17.20 அடியாக உள்ளது,
------------------
7)  #முக்கடல்அணையின் உச்ச நீர்மட்டம்----> + 25  அடி தற்போது அணையின் நீர் மட்டம்----> 23.70 அடியாக உள்ளது !!

முக்கடல் அணையிலிருந்து  #நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு---> 7.42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,
---------------
8) #அப்பர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்----> 2578.8 மில்லியன் கன அடி (2.58 TMC)
தற்போது அணையில் நீர் இருப்பு ---> 2553.81 மில்லியன் கன அடி

** ( 2.55TMC) இருப்பு உள்ளது

( அணையில் 99 % நீர் இருப்பு உள்ளது)

 , இன்று காலை நிலவரப்படி அப்பர் கோதையார் அணைக்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் உள்வரவாக அணைக்கு வந்து கொண்டிருந்தது 

இன்று காலை நிலவரப்படி அப்பர் கோதையாறு அணையிலிருந்து அணையின் ஷட்டர் வழியாக  #கோதையாற்றில் வினாடிக்கு --->183 .33 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது!!

---------------------
9) #லோயர்கோதையாறு அணையின் மொத்த நீர்த்தேக்கு  திறன் ---->24.07 மில்லியன் கன அடி, தற்போது அணையில் நீர் இருப்பு 
----->21.90   மில்லியன் கன அடி

( அணையில் 87.6 % நீர் இருப்பு உள்ளது)

இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையார் அணைக்கு வினாடிக்கு உள் வரவாக 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது

இன்று காலை நிலவரப்படி லோயர் கோதையாறு அணையிலிருந்து  #கோதையாற்றில் வினாடிக்கு ---> 265 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
-----------------
10)#குட்டியார் 
          அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்---> 8 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு--- 8 மில்லியன் கன அடி
---------------
11)#சின்னகுட்டியார்
           அணையின் மொத்த நீர்த்தேக்கு திறன்---> 98 மில்லியன் கன அடி தற்போது அணையில் நீர் இருப்பு---- > data not available !
**********
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய அணைகளான , #பேச்சிபாறை, #பெருஞ்சாணி, #அப்பர்கோதையார் ஆகிய அணைகளில் நீர் இருப்பு நன்றாக உள்ளது !

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு

இந்த பதிவு எதற்கு என்றால் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு ஆகும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் முக்கியமான இயற்கை அரண்ராக அதிலும் தென்னிந்திய அளவில் எல்லா காலகட்டத்திலும் நல்ல காலநிலை கொண்ட ஒரே மாவட்டங்கள் #கன்னியாகுமரி மற்றும் #திருவனந்தபுரம் ஆகும் இதற்கு காரணம் வடக்கிலும் & கிழக்கிலும் நமக்கு எல்லை போல உயர்ந்து நிற்கும் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும் , தென்னகத்திலே மேற்கு தொடர்ச்சி மலை முடிவு பெறும் பகுதியில்  கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான பகுதியை 6300 அடி கன்னியாகுமரி மாவட்டத்தின் அச்சன்காடு ( மாறாமலை மேல் பகுதி)  வருகிறது,  கோடையில் மழை காலத்தில்  கூட கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதியில் உருவாகும் மேகங்கள்  தான் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு சிறப்பாக மழையை அளிக்கிறது , அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையில் கூட இதமான தட்பவெப்ப நிலை , நிலையான கோடை வெப்பம் நிலவ கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டங்களை வடக்கிலும் கிழக்கிலும் சூழ்ந்து நிற்கும் இந்த உயரமான மலைகளும் அதன் அடர்ந்த காடுகளும் தான் நமக்கு காரணம் . map படம் -1 யை பார்க்கவும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவு மிகவும் பசுமை மிக்கது காரணம் நம் அரபிக்கடலின் ஈரம் மிகுந்த காற்றை தடுத்து மேகங்களை குவிப்பதால் நமக்கு கன்னியாகுமரி ஆரம்பித்து அனைத்து பகுதிகளிலும் சீரான மழை பரவல் கிடைக்கிறது இதனால் தான் பசுமை மிகுந்த மரங்கள் நீர்நிலைகள், மேற்கு நோக்கி பாய்ந்து நம் அரபிக்கடல் பகுதியில் கலக்கும் எண்ணற்ற ஆறுகள் பசுமையான பசுமை மாறாத புல்வெளி பரப்புகளை  காண முடியும் , கோடைகாலத்தில் , வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகமாக பெரும்பாலான நாள்கள் நம்மை சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் உயர்ந்து நிற்கும் இந்த மலை பகுதிகளில் உருவாகும் இடி மேகங்களால் தான் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகள் வரை மழையை கொடுக்கிறது , அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் நம் அரபிக்கடல் பகுதியில் கலப்பதால் தான் கன்னியாகுமரி , கேரளா கடலோர பகுதிகள் எல்லா காலகட்டத்திலும் மீன்வளம் மிக்க பகுதியாக பசுமையாக கடலோர பகுதிகளாக உள்ளது ,  கடலின் தட்பவெப்ப சூழல் மீன்வளத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் நமது மீனவர்களுக்கு  கூட உதவுவது இந்த மலைகளின் பங்களிப்பு தான் காரணம் ‌மேற்கு தொடர்ச்சி மலையின் பல ஆறுகள் நம் கன்னியாகுமரி ,கேரளா கடலோர பகுதிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீரை கொண்டு சேர்ப்பதால் தான் கேரளா, கர்நாடக, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் எல்லா காலகட்டத்திலும் மீன்வளம் மிக்கது  , 

பாலக்காடு இடைவெளி 29 km நீளம் கொண்டது அதனால் தான் கோவை , திருப்பூர் மாவட்டங்களின் வெப்ப அலை நேரடியாக வடக்கு  கேரளாவை பிப்பிரவரி மாதம் இறுதி முதல் மார்ச் வரை தாக்குகிறது அதனால் தான் வடக்கு கேரளாவில் கூட இந்த காலக்கட்டத்தில் பல நாள்கள் பல இடங்களில் 40°C வரை வெப்பநிலை காணப்படும் அதே போல தான் தெற்கு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் புனலூர் பகுதியில் 40°C வெப்பநிலை செங்கோட்டை இடைவெளி வழியாக கிடைக்கும் வறண்ட வெப்ப காற்றால் பிப்பரவரி இறுதி முதல் மார்ச் பகுதி வரை கிடைக்கிறது ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் நம் ஆரல்வாய்மொழி இடைவெளி வெறும் -3 km மட்டுமே இடைவெளி கொண்டது இந்த 3km இடையில் கூட ஒரு மலை 1500 அடி உயரத்தில் ஆரல்வாய்மொழி பகுதியில் நிற்கிறது இதனால் வடகிழக்கு திசையில் இருந்து மிகவும் குறைவாகவே வெப்பத்தை வடகிழக்கு திசையில் இருந்து கொண்டு வருகிறது இதனால் தான் நமக்கு கன்னியாகுமரி ,திருவனந்தபுரம் ‌மாவட்டத்தில் பிப்பிரவரி இறுதி முதல் மார்ச் பகுதி வரை கோடை வெப்பம் நிலையாக சீராக இருக்க காரணம் , நமது மாவட்டத்தை சூழ்ந்து நிற்கும் இந்த கடல் மட்டத்தில் இருந்து உயரமான மலைகளும் அடர்ந்த காடுகளும் தான் கோடையில் கூட நமக்கு வடகிழக்கு திசையில் இருந்து வரும் வறண்ட வெப்ப காற்றை தடுத்து அதன் வெப்பத்தை குறைத்து நமக்கு தருகிறது , உதாரணமாக நமது மாவட்டத்தில் இருந்து பேருந்தில் போகும் போது பலரும் கோடை காலத்தில் உணர்ந்து இருப்போம் நமது மாவட்டம் ஆரல்வாய்மொழி தாண்டியவுடன் ஒரு சூடான காற்று வீசும் அதே போல மீண்டும் நமது மாவட்டத்திற்குள் வரும் போது ஆரல்வாய்மொழி கடந்து நமது மாவட்டத்திற்குள் வந்த உடன் இதமான சூழல் காணப்படுவதும் இந்த இயற்கை கட்டமைப்பு கடல் மட்டத்தில் இருந்து மிக உயர்ந்த நமது மலைகள் தான் இதனால் தான் கன்னியாகுமரி மாவட்டம் , கேரளா எல்லாம் கடும் கோடை காலத்தில் கூட 40, 45°C தொடர் வெப்பம் அனல் காற்றை சந்தித்த வரலாறே கிடையாது , அதுபோல கோடையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் , கடுமையான காட்டு தீ போன்ற பாதிப்பு எதுவும் கிடையாது , எல்லா காலகத்திலும் ஈரப்பத்தை 75% முதல் 100% வரை தக்கவைத்து கொள்வதற்கு நமது இந்த இயற்கை அரண் அமைப்பு மிக முக்கியமான ஒன்றாகும் தமிழகத்தில் நீலகிரி ‌மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக 32.5% காடுகளையும் ‌,நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக மழை பொழிவு மற்றும், அதிக அணைகளையும் கன்னியாகுமரி மாவட்டம் மலை தொடர்கள் பெறுகிறது , நமது மாவட்டத்தில் மட்டும் 11 அணைகள் உள்ளது , 30 மேற்பட்ட அருவிகள் உள்ளது , இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மலைகளையும் காடுகளையும் ‌மிகவும் பாதுகாப்பது அவசியம் ஆகும் , இன்னொரு விஷயம் நமது மாவட்டம் முழுவதும் மரங்களையும் தற்போது இருப்பதை போல போணி காக்க வேண்டும் , 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது முழு நேர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் கடல் மீனவர் அல்லது மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த மீனவர்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் இந்திரா குடியிருப்பு திட்ட வழிமுறைகளின் அடிப்படையில் 5 ஆயிரம் வீடுகளை மொத்தம் ரூ.85 கோடியில் கட்ட தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கு 700 வீடுகள் கட்டி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், முழு நேர மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் நாகர்கோவிலில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மீனவர் பெயரில் வேறு எங்கும் கான்கிரீட் அல்லது நிரந்தர வீடுகள் இல்லாத, தங்களது பெயரில் நிலத்திற்கான பட்டா உள்ள மற்றும் அரசின் வேறு எந்த வீட்டு வசதி திட்டத்திலும் பயனடைந்திராத மீனவராக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...