வெள்ளி, 1 அக்டோபர், 2021

குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக 3 வகுப்பறை கட்டிடம்



அடிக்கல்நாட்டு விழாவில் குளச்சல் தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..



குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக 3 வகுப்பறை கட்டிடம் அமைக்க குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து பணியினை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் MLA துவங்கி இன்று 30-09-21 அடிக்கல் நாட்டினார்..


மேலும் இந்த நிகழ்வில் குளச்சல் நகர தமுமுக செயலாளர் மாஹீன், நகர மமக செயலாளர் மாஹீன், நகர பொருளாளர் ஆரிப், மற்றும் முன்னாள் தமுமுக மாவட்ட பொருளாளர் சுலைமான் அவர்களும் கலந்து கொண்டனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...