செவ்வாய், 10 செப்டம்பர், 2024
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புப் படையினர் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் திங்கள்கிழமை காலை நல்ல பாம்பு பதுங்கியிருப்பதைப் பார்த்த பணியாளர்கள் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்குகு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், தீயணைப்பு மீட்புப் படையினர் வந்து பாம்பைப் பிடித்தனர். அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், பின்னர், அந்தப் பாம்பு வனப் பகுதியில் விடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
திங்கள், 9 செப்டம்பர், 2024
ஆரல்வாய்மொழி: பைக் விபத்தில் Bjb நிர்வாகி உயிரிழப்பு
ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன் பகுதியை சேர்ந்தவர் பாரத் என்ற மகேஷ் (46). இவர் வெல்டிங் தொழிலாளி. மேலும் அதே ஊராட்சியின் பாரதிய ஜனதா தலைவராகவும் செயல்பட்டு வந்தார். மகேஷ் தனது நண்பர் பூதலிங்கம் (45) என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழிக்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் அங்கிருந்து அவர்கள் செண்பகராமன் புதூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த மகேஷ் பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மகேஷுக்கு பகவதி அம்மாள் என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
இரணியல் அருகே 4 வழிச்சாலையில் பைக் ரேஸ் ,வாலிபர் ஓட்டிய பைக் மோதி தம்பதி படுகாயம்
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலை தோட்டியோட் டில் இருந்து நான்கு வழி சாலை பிரிந்து கொன்னக் குழிவிளை, நுள்ளிவிளை. மணக்கரை ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறது. பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் நடந்து வந்தாலும், இந்தப் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலையை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே அகலமாக உள்ள இந்த சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், ரீல்ஸ்
எடுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று மாலையும் மணக்கரை நான்கு வழிச்சாலைக்கு பைக்கில் வந்த வாலிபர்கள் சிலர் பைக் ரேஸ் நடத்தி ரீல்ஸ் எடுத்துள்ளனர். சிறிப் பாய்ந்த பைக்குகளில் ஒரு வரை ஒருவர் முந்தி சென்றதாக தெரிகிறது.
அப்போது ஒரு பைக் புளியமூடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற பைக் மீது வேகமாக மோதியது.
இரண்டு பைக்குகளும் இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் முன்னால் பைக்கில் சென்ற தம்பதியரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிஆர்பி எப் வீரர் ராஜன் (47, அவரது மனைவி ஹேமா (42 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் வலி யால் துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த வாலிபர் வினோத் என்பவரும் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்ப வம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒதுக்குப்புற மான இந்த நான்கு வழிச் சாலையை பொதுமக்கள் நலன் கருதி போலீசார் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ok
போலீஸ் வாகனத்தை இடிக்க முயன்ற சொகுசு கார் - பறிமுதல்
நித்திரவிளை அருகே உள்ள கல்வெட்டான் குழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பதினொரு மணியளவில் இரண்டு சொகுசு கார்களில் வந்தவர்கள் குடிபோதையில் நின்று கொண்டு, அந்த பகுதி வழியாக பைக்கில் சென்ற ஒரு நபரிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் நித்திரவிளை போலீசார் ரோந்து பணிக்காக சென்றனர். போலீசாரை கவனித்த குடிமகன்கள் உடனடியாக போலீஸ் வாகனத்தை இடிப்பது போல சென்று விட்டு, சொகுசு காரில் தப்பி சென்று விட்டனர்.
உடனடியாக போலீசார் பின்னால் சென்று அந்த 2 கார்களையும் துரத்தினார்கள். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய போலீசார், துத்தூரில் வைத்து ஒரு சொகுசு காரை மட்டும் மடக்கி படித்தனர். உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் மடக்கி பிடித்த காரை உடனடியாக போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். சாலையில் போதையில் நின்று பிரச்சனை ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
திங்கள்நகர்: மாணவி கர்ப்பம் காதலன் மீது போக்சோ
குமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த சில நாட்களாக உடலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு பரிசோதனை செய்த போது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருந்த தெரிய வந்தது.
உடனே மாணவியிடம் நடத்திய விசாரணையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருவதாகவும், இதை யடுத்து வாலிபர் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி மாணவியின் பெற்றோர்
இல்லாத நேரத்தில் சென்று திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக மாணவி தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த 20 வயது வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது மாணவி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த வாலிபர் வெளியூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 21 வயதும் மாணவிக்கு 18 வயதும் நிறைவடைந்த உடன் இரு வீட்டார்கள் இணைந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகில் பைக் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அடுத்த கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற செல்வராஜ், சாலையை கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக அவ்வழி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த வரை அக்கம் பக்கத்தில் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் உயிரிழந்தார். கொற்றிக்கோடு போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்
குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்
பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு பூப்பது வழக்கமாகும். அதன்பின் அந்த மரத்தின் வாழ்வு முடிந்து விடும். பனை மரம் பூத்துக் குலுங்குவதை ஏராளமானோர் அபூர்வமாக பார்த்துச் செல்கின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்






