வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது - மம்தா

*திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி*

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், ஊழல்வாதிகளும், வன்முறையாளர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைவதாக குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை

*தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்*

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடனும் காணப்படும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மியான்மரில் ஆட்சியை ஜனநாயக சக்திகளிடம் திருப்பித் தர வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்*_

*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*

  *📡Headlines*

மியான்மரில் ஆட்சியை ஜனநாயக சக்திகளிடம் திருப்பித் தர வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்

நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆங்சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது. பர்மிய ராணுவம் தான் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய அரசு அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டவர்களிடத்தில் மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அரசு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜோ பைடன் சீனா ஏற்படுத்தி வரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்றும் கூறினார். அமெரிக்காவின் நலன் கருதி சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜோ பைடன் கூறினார்.

*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*

  *📡Headlines*

_*✍🏻⚡மியான்மரில் ஆட்சியை ஜனநாயக சக்திகளிடம் திருப்பித் தர வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்*_

நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆங்சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது. பர்மிய ராணுவம் தான் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய அரசு அதிகாரத்தை ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டவர்களிடத்தில் மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அரசு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜோ பைடன் சீனா ஏற்படுத்தி வரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்றும் கூறினார். அமெரிக்காவின் நலன் கருதி சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜோ பைடன் கூறினார்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...