வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது - மம்தா

*திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி*

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், ஊழல்வாதிகளும், வன்முறையாளர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைவதாக குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...