ஆழ்கடல் பகுதியில் படகில் சமையல் வேலைக்காக சென்ற மகன் மாயம்
மீட்டுத் தர கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு ...
நாகர்கோவில் கலெக்டர் ஆபீசில் வாராந்திர குறைதீர் முகாம் நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களை சார்ந்த பலரும் மனு கொடுக்க வந்திருந்தனர்.
இதில் குளச்சல் நகரைத்தை சார்ந்த ஹயறு நிஷா என்பவர் முகாமில் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
நான் குளச்சல் காமராஜர் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறரேன். எனது மூத்த மகன் முகைதீன் யாசர் அலி (32) சென்ற மாதம் 4-ம் தேதி கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியில் மீன்பிடிப் படகில் சமையல் தொழிலுக்கு சென்றார். 9ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது
யாசர் அலி மாயமாகிவிட்டதாக
கொச்சி மீன் பிடி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.... தற்போது ஒரு மாதம் தாண்டியும் எனது மகன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே .மகனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என மனு அளித்திருந்தார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக