வியாழன், 12 செப்டம்பர், 2024

1000 மேற்பட்ட கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய கன்னியாகுமரி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று முன்தினம் (செப்.,10) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே இன்று (செப்., 12) நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி, சன்னதி தெரு, படகு தளம் செல்லும் சாலை, கடற்கரை சாலை, சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது

புதன், 11 செப்டம்பர், 2024

குழந்தைகளை தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்ற பெண்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஊரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த 25 வயது கார் டிரைவர் ஒருவருடன் அந்த பொண்ணுக்கு பழக்கமாகி, அது கள்ளக் காதலாக மாறி அவர்கள் பல
இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். இதை அறிந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் அறிவுரை கூறியதும் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 35 பவன் தங்க நகைகள், ரூபாய் 85 ஆயிரத்துடன் மாயமானார். இது தொடர்பாக கணவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். நேற்று (செப்.,10) அந்த கள்ளக்காதல் ஜோடி மார்த்தாண்ட போலீஸ் நிலையம் வந்துள்ளது. அப்போது கணவரும் குழந்தைகளும் அந்த பெண்ணிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவள் கணவரிடம் வாழ முடியாத என கூறி கழுத்தில் கிடந்த தாலி மற்றும் நகைகள், பணம் போன்றவற்றை வீசி எறிந்து விட்டு கள்ளக்காதலுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸ் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த பெண் ஒரு ஆட்டோ வரவழைத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தார்

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சர்வதேச மகளிர் வாள்போட்டி கன்னியாகுமரி மாவட்ட மாணவி பங்கேற்பு

சர்வதேச மகளிர் வாள் விளையாட்டுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த என். வி ஜெனிஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அவருடன் மேலும் ஆறு பேர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர். ஜெனிஷா 12-ம் வகுப்பு மாணவியாவார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் சார்பில் ஆற்றூர் அடுத்த கல்லுப்பாலம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவியை கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக தலைவர் சிந்துகுமார், செயலாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் செல்வகுமார் உட்பட பலர் பாராட்டி உள்ளனர்.

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பு

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புப் படையினர் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் திங்கள்கிழமை காலை நல்ல பாம்பு பதுங்கியிருப்பதைப் பார்த்த பணியாளர்கள்
குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்குகு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு மீட்புப் படையினர் வந்து பாம்பைப் பிடித்தனர். அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், பின்னர், அந்தப் பாம்பு வனப் பகுதியில் விடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

ஆரல்வாய்மொழி: பைக் விபத்தில் Bjb நிர்வாகி உயிரிழப்பு

ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன் பகுதியை சேர்ந்தவர் பாரத் என்ற மகேஷ் (46). இவர் வெல்டிங் தொழிலாளி. மேலும் அதே ஊராட்சியின் பாரதிய ஜனதா தலைவராகவும் செயல்பட்டு வந்தார். மகேஷ் தனது நண்பர் பூதலிங்கம் (45) என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கிருந்து அவர்கள் செண்பகராமன் புதூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த
மகேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மகேஷுக்கு பகவதி அம்மாள் என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

இரணியல் அருகே 4 வழிச்சாலையில் பைக் ரேஸ் ,வாலிபர் ஓட்டிய பைக் மோதி தம்பதி படுகாயம்

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலை தோட்டியோட் டில் இருந்து நான்கு வழி சாலை பிரிந்து கொன்னக் குழிவிளை, நுள்ளிவிளை. மணக்கரை ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறது. பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் நடந்து வந்தாலும், இந்தப் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலையை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அகலமாக உள்ள இந்த சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், ரீல்ஸ் எடுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று மாலையும் மணக்கரை நான்கு வழிச்சாலைக்கு பைக்கில் வந்த வாலிபர்கள் சிலர் பைக் ரேஸ்
நடத்தி ரீல்ஸ் எடுத்துள்ளனர். சிறிப் பாய்ந்த பைக்குகளில் ஒரு வரை ஒருவர் முந்தி சென்றதாக தெரிகிறது. அப்போது ஒரு பைக் புளியமூடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற பைக் மீது வேகமாக மோதியது. இரண்டு பைக்குகளும் இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் முன்னால் பைக்கில் சென்ற தம்பதியரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிஆர்பி எப் வீரர் ராஜன் (47, அவரது மனைவி ஹேமா (42 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் வலி யால் துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த வாலிபர் வினோத் என்பவரும் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்ப வம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒதுக்குப்புற மான இந்த நான்கு வழிச் சாலையை பொதுமக்கள் நலன் கருதி போலீசார் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ok

போலீஸ் வாகனத்தை இடிக்க முயன்ற சொகுசு கார் - பறிமுதல்

நித்திரவிளை அருகே உள்ள கல்வெட்டான் குழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பதினொரு மணியளவில் இரண்டு சொகுசு கார்களில் வந்தவர்கள் குடிபோதையில் நின்று கொண்டு, அந்த பகுதி வழியாக பைக்கில் சென்ற ஒரு நபரிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் நித்திரவிளை போலீசார் ரோந்து பணிக்காக சென்றனர். போலீசாரை கவனித்த குடிமகன்கள் உடனடியாக போலீஸ் வாகனத்தை இடிப்பது போல சென்று விட்டு, சொகுசு காரில் தப்பி சென்று விட்டனர்.
உடனடியாக போலீசார் பின்னால் சென்று அந்த 2 கார்களையும் துரத்தினார்கள். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய போலீசார், துத்தூரில் வைத்து ஒரு சொகுசு காரை மட்டும் மடக்கி படித்தனர். உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் மடக்கி பிடித்த காரை உடனடியாக போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். சாலையில் போதையில் நின்று பிரச்சனை ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...