குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சேர்ந்தவர் கபீர் இவர் மணவாளக்குறிச்சி முகுந்தன் மருத்துவமனை அருகே அப்ப கடை வைத்துள்ளார் நேற்று ஆப்ப கடைக்கு தேவையான சாதனங்களை வாங்கி வர மொபட்டில் வெள்ளி சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு சாதனங்கள் வாங்கிவிட்டு மீண்டும் மணவை பகுதிக்கு செல்ல வெள்ளிச்சந்தை டூ வெள்ளமோடி சாலையில் செனறுக்கொண்டிருந்தார் வெள்ளமோடி பக்கமாக செல்லும் போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து கபீர் ஓட்டிச்சென்ற மொபட்டை முந்தி செல்ல முயற்சித்தது. இதில் எதிர்ப்பாராமல் கல்லூரி பேருந்து மொபட் மீது மோதியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கபீரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் தெருவுக்கடை காட்டுவிளையை சேர்ந்த பிரபு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .......
வியாழன், 15 பிப்ரவரி, 2024
கல்லூரி பேருந்து மோதியதில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உயிரிழப்பு
கல்லூரி பேருந்து மோதியதில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உயிரிழப்பு
புதன், 14 பிப்ரவரி, 2024
கன்னியாகுமரி அருகில் ஸ்கூல் வாகனம் மோதி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி அருகில் ஸ்கூல் வாகனம் மோதி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி அருகில் லீபுரத்தை சேர்ந்தவர் வேதராஜமணி(58). திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.தேங்காய்கள் வெட்டும் வேலை செய்து வருகின்றார் வேதராஜமணி ,நேற்று சாயாங்காலம் பஞ்சலிங்கபுரத்தில் இருந்து நரிகுளம் மேம்பாலம் வழியாக கன்னியாகுமரி செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார் வேதராஜமணி அப்போது
நரிக்குளம் மேம்பாலத்தில் திரும்பும் சமயத்தில் அஞ்சுகிராமத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக, அருண் (38)என்பவர் ஓட்டி வந்த ஸ்கூல் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், வேதராஜமணி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படு காயங்களோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் விபத்து குறித்து கன்னியகுமரி போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்
செவ்வாய், 13 பிப்ரவரி, 2024
ஆழ்கடல் பகுதியில் படகில் சமையல் வேலைக்காக சென்ற மகன் மாயம்
ஆழ்கடல் பகுதியில் படகில் சமையல் வேலைக்காக சென்ற மகன் மாயம்
மீட்டுத் தர கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு ...
நாகர்கோவில் கலெக்டர் ஆபீசில் வாராந்திர குறைதீர் முகாம் நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களை சார்ந்த பலரும் மனு கொடுக்க வந்திருந்தனர்.
இதில் குளச்சல் நகரைத்தை சார்ந்த ஹயறு நிஷா என்பவர் முகாமில் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
நான் குளச்சல் காமராஜர் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறரேன். எனது மூத்த மகன் முகைதீன் யாசர் அலி (32) சென்ற மாதம் 4-ம் தேதி கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியில் மீன்பிடிப் படகில் சமையல் தொழிலுக்கு சென்றார். 9ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது
யாசர் அலி மாயமாகிவிட்டதாக
கொச்சி மீன் பிடி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.... தற்போது ஒரு மாதம் தாண்டியும் எனது மகன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே .மகனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என மனு அளித்திருந்தார்...
ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024
நாளை மின் தடை பற்றிய அறிவிப்பு
குளச்சலில் நாளை மின் தடை
குமரி மாவட்டம் ,
செம்பொன்விளை, , முட்டம்,மூலச்சல் ,சேரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்க விருக்கிறன்றன அதன்படி நாளை மூலச்சல் மின்வினியோக பகுதிக்ளான
சாண்டம், மணக்காவிளை,, , காயல்கரைசித்திரங்கோடு போன்ற பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து சாயங்காலம் 5 மணி வரையிலும்
சேனம்விளை தெங்கன்குழி,செம்பொன்விளை மத்திகோடு, சாஸ்தான்கரை,திக்கணங்கோடு,குளச்சல்,சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை
கீழ்க்கரை, இரும்பிலி, ஆலஞ்சி, வாணியக்குடி,பத்தறை குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள் சந்தை,கொட்டில்பாடு , கண்டன்விளை, குசவன்குழி,கண்டன்விளை, குசவன்குழி,இரணியல் நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமன்கூடல் மண்டைக்காடு, , நடுவூர்கரை, பரப்பற்று, , , லெட்சுமிபுரம் கடியப்பட்டிணம், ,ஐ. ஆர். இ., வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை,கூட்டுமங்கலம்,முட்டம்,அம்மாண்டிவிளை ,சக்கப்பத்து, ஆற்றின்கரை,புதூர், சாத்தன்விளை, ஆலன்விளை, , , கட்டிமாங்கோடு,குருந்தன்கோடு மணவாளக்குறிச்சி,திருநயினார்குறிச்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...