புதன், 4 செப்டம்பர், 2024

குமரியில் அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை

திங்கள்நகர் அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் அவர் மனைவி ராஜம் . இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு தெரு பகுதியில் செல்லும் போது, எதிரே அழகிய மண்டபத்திலிருந்து குளச்சல் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளான செல்வராஜ், ராஜம் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு
பஸ் டிரைவர் ராபர்ட் சிங் என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமர்தீன் (செப்.,2) தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவர் ராபர்ட் சிங்கிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரேவதி வாதாடினார். தொடர்ந்து ராபர்ட் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மார்த்தாண்டம் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது; 3 பெண்கள் மீட்பு

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அடுத்த மதி ஜங்ஷனில் உள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி, சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் மசாஜ்
சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த யோபின் சாம், அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ராணிபேட்டை, திருப்புனம், தர்மபுரி பகுதியை சேர்த்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் 3பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் ______________________________________________________________________________________________ குமரி மாவட்டத்தின் இன்றைய செய்தி துளிகள்:3.9.2024 * குமரி மாவட்டம் திடல் அருகே விளை நிலங்களில் புகுந்த யானை கூட்டம். சுமார் 1300 வாழை மற்றும் 20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியது.
*மார்த்தாண்டம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பேருந்தில் 18000 ரூபாயை பறிகொடுத்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுலோரா இவர் குளச்சலில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார் பேருந்தில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருத்து இதனைப் பயன்படுத்தி இவர் கையில் வைத்திருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றனர் நாகர்கோவில் பஸ் நிலையம் வந்ததும் தனது மணி பர்ஸை காணாத
சுலோரா கூச்சலிட்டார் அந்த பர்ஸில் 18000 ரூபாய் இருந்தது என்று கூறி அழுதுள்ளார் உடனடியாக அந்த பஸ்ஸை கோட்டாறு காவல் நிலையத்திற்கு பஸ் டிரைவர் கொண்டு சென்றார் காவலர்கள் பேருந்து ஏறி அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர் ஆனாலும் பர்ஸ் கிடைக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

திங்கள், 2 செப்டம்பர், 2024

பைக் மீது வாகனம் மோதி விபத்து சிறுவன் பலி தந்தைக்கு காயம்

குமரி மாவட்டம் பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் விஜு .நேற்று மாலை பைக்கில் தனது மகன் ஆகாஷ் 12 வயது ஆகிறது உறவினர் ஒருவரின் கல்லறை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போத
வேர்க் கிளம்பி தபால் நிலையம் அருகில் செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த ஜீப் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஆகாஷ், தந்தை விஜு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆகாஷை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை விஜு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்த சிறுவன் தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறான். திருவட்டார் போலீசார் வழக்கு விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற ஜீப் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரியில் நாளை (3.9.2024) எங்கெல்லாம் மின் தடை

03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி,வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.மேலும் 03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம்,
வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.

சனி, 31 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் அருகே வள்ளத்தில் இருந்து கடலில் விழுந்த மீனவர் பரிதாப சாவு

தேங்காப்பட்டணம் அடுத்த இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாசன் மகன் ஆரோக்கிய நிதின் இவர் தனது தம்பியான நிதிஷ் என்பவரின் பைபர் வள்ளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். 

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் போலீசாரால் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விபச்சாரம் நடைபெற்ற வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு
சோதனை மேற்கொண்டதில் மூன்று அழகிகள் மற்றும் 2 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகரில் தனி வீட்டில் வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...