புதன், 4 செப்டம்பர், 2024
குமரியில் அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
திங்கள்நகர் அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் அவர் மனைவி ராஜம் . இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு தெரு பகுதியில் செல்லும் போது, எதிரே அழகிய மண்டபத்திலிருந்து குளச்சல் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளான செல்வராஜ், ராஜம் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு பஸ்
டிரைவர் ராபர்ட் சிங் என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அமர்தீன் (செப்.,2) தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவர் ராபர்ட் சிங்கிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்..
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரேவதி வாதாடினார். தொடர்ந்து ராபர்ட் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக