வியாழன், 22 ஆகஸ்ட், 2024
கடலில் பலத்த காற்று: படகில் தவறி விழுந்த தூத்தூர் மீனவர் பலி
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (50). மீன்பிடி
தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை பூத்துறை என்ற பகுதியை சேர்ந்த ஜோன் பிராய்
என்பவருக்கு சொந்தமான படகில் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க
சென்றார்.
இவருடன் ஜான் உட்பட எட்டு மீனவர்கள் உடன் இருந்தனர். நேற்று அதிகாலையில் ஆழ்கடல்
பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆழ்
கடலில் பலத்த காற்று வீசி உள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் ஷாஜி படகின் உள்ளே
விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே
உயிரிமந்துள்ளார். சக மீனவர்கள் ஷாஜியின் உடலை தேங்காபட்டணம் மீன்பிடித்
துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குளச்சல்
கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதன், 21 ஆகஸ்ட், 2024
சிறுமி மாயம் குமரி ரயில் நிலையங்களில் தேடுதல்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். சென்ற மாதம் குடும்பத்துடன் திருவனந்தபுரம் வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் 13 வயதான தஸ்மிக் தம்சம் என்ற மகள் உட்பட 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அன்வரும் மனைவியும் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தஸ்மீ க் தம்சத்தை வீட்டில் இருந்து காணவில்லை. இது குறித்து அன்வர் உசேன் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தஸ்மிக் திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில்
கன்னியாகுமரி ரயில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்தது. அவர் ரயிலில் இருப்பது போன்ற ஒரு போட்டோ போலீசில் கிடைத்தது.தொடர்ந்து கழக்கூட்டம் போலீசார் இன்று கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்
அதன் பேரில் இன்று காலையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீசார் வந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் சிறுமியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். மேலும் தொடர்ந்து கேரளா போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
குளச்சலில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை
தூத்துக்குடி பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அலோசியஸ் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக் (17) தக்கலை அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார். அடுத்த வாரம் கல்லூரி திறக்க உள்ள நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற ஏக்கத்தில் ஜாக்சன் டியூக் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு ஜாக்சனின் பள்ளி தோழி ஒருவர் அஜீஸ் ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜாக்சன் தன்னிடம் வீடியோ காலில், கல்லூரி கட்டணம் செல்ல முடியாததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அழைப்பை துண்டித்ததாக கூறியுள்ளார்.
தாயார் அறையில் சென்று பார்த்த போது, அறை பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ஜாக்சன் இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து
குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளச்சல் துறைமுகம் ரூ. 300 கோடியில் விரிவாக்கம் :கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட
ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- ரூ. 300
கோடி மதிப்பீட்டில் குளச்சல் மின்பிடித்துறைமுக விரிவாக்கம் அமையவுள்ள இடம்
நேரடியாக ஆய்வு செய்யப்பட்டதோடு, அதன் திட்ட விளக்கம் கேட்டறியப்பட்டது. மேலும்,
குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தி மீன்விற்பனை
செய்யவும், மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தவும் போதிய இடவசதியினை ஏற்படுத்தி தர
குளச்சல் மீன்பிடித்துறைமுக பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்
அக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
தெரிவிக்கப்பட்டது. மேலும், குளச்சல் புனித மரியன்னை தொடக்க பள்ளியின் விளையாட்டு
மைதானத்தின் அருகாமையில் அமைந்துள்ள பனை வெல்ல கூட்டுறவு சங்கம் பயன்படுத்தபடாத
இடத்தினை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திட பொது மக்களால் விடுக்கப்பட்ட
கோரிக்கையினை தொடர்ந்து, அதற்கான இடத்தினை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு
தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மா.
சின்னகுப்பன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024
சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது
கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் Insta வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை Download செய்து மேலும் பலருக்கு அனுப்பியதாக நான்கு பேர் மீதும் போக்சோ வழக்குப்பதியப்பட்டுள்ளது
மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் அபினேசுக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுசிறிது நாள் கழிந்து இருவரும் வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அபினேஷ் சிறுமியை தன்வயப்படுத்தி அவரை வீடியோ காலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அச்சிறுமி அபினேசுடன் நட்பை முறித்துக் கொள்ளவே, கோபமடைந்த அபினேஷ் தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இதனை அபினேஷின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து அதனை மேலும் பலருக்கு சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் வரும் 22 அன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்
கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை
கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் 22.08.2024 (வியாழக்கிழமை ) அன்று காலை 8.00 மணி முதல் 2.00 மணி வரை மின் தடை
கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும்
கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை,மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம்,எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம்முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலணி. ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது.
#karungal #paliyadi #kanniyakumari
தக்கலையில் கணவனை விட்டுட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...