வியாழன், 22 ஆகஸ்ட், 2024

கடலில் பலத்த காற்று: படகில் தவறி விழுந்த தூத்தூர் மீனவர் பலி

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (50). மீன்பிடி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை பூத்துறை என்ற பகுதியை சேர்ந்த ஜோன் பிராய் என்பவருக்கு சொந்தமான படகில் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றார். இவருடன் ஜான் உட்பட எட்டு மீனவர்கள் உடன் இருந்தனர். நேற்று அதிகாலையில் ஆழ்கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆழ்
கடலில் பலத்த காற்று வீசி உள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் ஷாஜி படகின் உள்ளே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிமந்துள்ளார். சக மீனவர்கள் ஷாஜியின் உடலை தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குளச்சல் கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...