சனி, 11 ஜனவரி, 2025

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந்தைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
புளிமூடு கோவில் அருகே செல்லும் போது சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். இதில் சுனில் ராஜ் நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இது பற்றி தக்கலை போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 13 நவம்பர், 2024

தக்கலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மாதாந்திர பணிக்காக மின்தடை

மின்தடை தக்கலை மின் விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: தக்கலை உபமின் நிலையத்தில் மற்றும் உயர் மின்அழுத்த பாதையில் வருகிற 14ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்படுகிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தக்கலை, மணலி, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டிகோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு,மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்ட பம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய இடங்களுக்கும், அதனை சார்ந்த துணை கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.

திங்கள், 11 நவம்பர், 2024

வரும் 12 , 13 தினங்களில் குமரியில் எங்கெல்லாம் மின் தடை

செம்பொன்விளை துணைமின் நிலையத்தில் நாளை (நவ., 12) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்தி கோடு, சேனம்விளை, நெய்யூர், குளச்சல், உடையார்விளை, இரும்பிலி, சைமன் காலனி, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம்,
திங்கள்நகர், இரணியல், கண்டன்விளை, பத்தளை, தலக்குளம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.____ 13.11.2024 (புதன்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 13.11.2024 (புதன்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

லாரி மோதி சிறுமி(6) வயது சிறுமி பலி குமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவி உமையாள் (6) இன்று பள்ளியிலிருந்து அவரது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மயிலாடியில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டாரஸ் லாரி திடீரென பின்னால்
வந்ததில், இருசக்கர வாகனம் மீது மோதி சிறுமி உமையாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
குமிரியில் பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று அறிவித்தார். அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்

திங்கள், 16 செப்டம்பர், 2024

மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

பேச்சிப்பாறை அடுத்த குற்றியார் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் இளைய மகள் அபிநயா (17). இவர் அங்குள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். நேற்று (செப் 15) ஓணம் பண்டிகை முன்னிட்டு மாலை 6 மணியளவில் அளவில் அபிநயாவும், மற்றொரு இளம் பெண்ணுமாக மாத்தூர் தொட்டி
பாலத்தை பார்வையிட சென்றனர். அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்ற கொண்டிருந்தனர். அப்போது அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டே சென்றார். பின்னர் அபிநயா செல்போனில் எதிர்முனையில் பேசியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கே சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்

சனி, 14 செப்டம்பர், 2024

குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வில்லிவிளையைச் சேர்ந்தவர் டெம்போ டிரைவர் முருகேசன் (52). இவர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் முருகேசனை தேடி வந்த நிலையில், நேற்று (செப்.,13) ஈத்தாமொழியில் வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். _____________________________________________________________________________________________ செய்தி துளிகள்: குமரி மாவட்டம் திங்கள் நகர்: மினிபேருந்து ஓட்டுநர்-பேரூராட்சி ஊழியர் மோதல் திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மினி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது. இதற்கு பேரூராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும் மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். _____________________________________________________________________ _________________________ கைது செய்யப்பட்ட துணை சர்வேயருக்கு நீதிமன்ற காவல் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட கிள்ளியூர் தாலுகா துணை சர்வேயர் சிறையில் நேற்று(செப்.13) அடைக்கப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் (பொறுப்பு) நீதிபதி உத்தரவிட்டார். நில அளவை செய்வதற்காக லஞ்சம் வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். _______________________________________________________________________________________________ குமரி அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு குமாரபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன் இவர் சித்திரங்கோட்டில் மகள் வீட்டில் இருந்தார். மகளின் மகன் ராஜசேகருக்கு சொந்தமான காரை 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் போர்டிகோவில் ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி வைத்திருந்தார். 12ம் தேதி கார் உருண்டு முத்தையன் மீது மோதியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்
this

வியாழன், 12 செப்டம்பர், 2024

குமரி : கள்ளக்காதலுடன் ஓட முயன்ற 42 வயது பள்ளி ஆசிரியை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது வீட்டிற்கு உறவுக்கார வாலிபர் ஒருவார் வந்து செல்வது வழக்கம். பின்னர் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஒருநாள் வாலிபரும் ஆசிரியையும்
உல்லாசமாக இருப்பதை கண்டு பிரச்சனை ஏற்பட்டு, மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதில் ஆசிரியை காது கிழிந்து தொங்கி உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கள்ளக்காதலன் காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்த நேரம், ஆசிரியை கணவர் திடீரென வந்ததால் மீண்டும் வாலிபரை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்றது. போலீசார் ஆசிரியை மற்றும் அவரது கணவர், கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியை கள்ளக்காதலுடன் தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாய் இருந்தார். போலீசார் பலமுறை சமாதானம் செய்தும் ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் போலீசார் ஒரு வழியாக அந்த ஆசிரியை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...