திங்கள், 16 செப்டம்பர், 2024
மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
பேச்சிப்பாறை அடுத்த குற்றியார் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் இளைய மகள் அபிநயா (17). இவர் அங்குள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
நேற்று (செப் 15) ஓணம் பண்டிகை முன்னிட்டு மாலை 6 மணியளவில் அளவில் அபிநயாவும், மற்றொரு இளம் பெண்ணுமாக மாத்தூர் தொட்டி பாலத்தை பார்வையிட சென்றனர். அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்ற கொண்டிருந்தனர்.
அப்போது அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டே சென்றார். பின்னர் அபிநயா செல்போனில் எதிர்முனையில் பேசியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கே சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக