நாகர்கோவில் பகுதியில் 28 இல் மின்தடை
நாகர்கோவில் நகரப் பகுதியில் செவ்வாய்க் கிழமை ( ஜூலை 28 ) மின்தடை செய்யப்படுகிறது . இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகர்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 28 ) நடைபெற உள்ளதால் , அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வல்லன்குமாரன்விளை , தடிக்காரன்கோணம் , வடசேரி , ஆசாரிப்பள்ளம் துணை மின் நிலைய பகுதிகளிலும் , அதைச் சார்ந்துள்ள நாகர்கோவில் நகர்ப்பகுதி , பெருவிளை , சுங்கான்கடை வடசேரி கிருஷ்ணன் கோவில் , எஸ்.எம்.ரோடு , கல்லூரிச் சாலை , நீதிமன்றச் சாலை , கே.பி.ரோடு , பால்பண்ணை , நேசமணிநகர் , தோப்பூர் , வேம்பனூர் , அனந்தன்நகர் , பார்வதிபுரம் , புத்தேரி , இறச்சகுளம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ....
_________________________________________
குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட கருங்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை ) நடக்கிறது . எனவே , அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருங்கல் , பாலூர் , திப்பிறமலை , பூட்டேற்றி , கொட்டேற்றிகடை , தெருவுகடை , செந்தறை , மேல்மிடாலம் , மிடாலம் , நட்டாலம் , எட்டணி , இடவிளாகம் , பள்ளியாடி , பாரக்கடை , குழிக்கோடு , முருங்கவிளை , செல்லங்கோணம் , முள்ளங்கினாவிளை , கஞ்சிக்குழி , கருமாவிளை , படிவிளை , மானான்விளை , பெருமாங்குழி , ஓளிப்பாறை , மீறி , கல்லடை , ஹெலன்காலனி மற்றும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது . இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் .....
#ColachelToday
#Kanyakumari
#Powercut