குமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட திருப்பதிசாரத்தை சேர்ந்த வெள்ளை கணேசன் (51) என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ஆவார். நெல்லை ,குமரி மாவட்டங்களில் கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.
நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கணேசன் (எ) வெள்ளை கணேசன் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின்படி வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. காசிபாண்டியன் அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கணேசன் (எ) வெள்ளை கணேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.