ஞாயிறு, 17 மே, 2020

குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் காமராஜர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மழை காரணமாக சாஸ்தான்கரையில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக கார், டெம்போ போன்ற வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுமரங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மழை, காற்று காரணமாக கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கட்டுமரங்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...