தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த குரங்கு உணவுகிடைக்காமல் குளச்சல் பகுதியில் அலைந்து திரிந்து வருகிறது . நேற்று மதியம் காமராஜர் சாலையில் இந்த குரங்கு புகுந்தது .
பின்னர் அங்குள்ள வீடுகள் மரங்களில் தாவி தாவி உணவு ஏதாவது கிடைக்குமா ? என அங்குமிங்கும் திரிந்தது . ஒரு சிறுமி ஆர்வ மிகுதியில் வீட்டிலிருந்து வாழைப்பழம் எடுத்து வந்து குரங்கு முன் வைத்தார் . அதை சாப்பிட்டு முடித்த குரங்கு அதே வீட்டுக்குள் புகுந்து அங்கு மீதியிருந்த வாழைப்பழங்கள் ,டிபனை எடுத்து வெளியே கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு சென்றது. இந்த காட்சிகளை சிறுவர் முதல் பெரியவர்வரை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் வீட்டுக்குள் குரங்கு புகுந்ததால் மீண்டும் மீண்டும் குரங்கு வருமா ? என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் . எனவே உணவின்றி தவிக்கும் இந்த குரங்கை வனத்துறையி னர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என பொதுமக்கள் வலிவுறுத்தி உள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக