சனி, 25 ஜூலை, 2020
குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அம்ல்படுத்த திமுக கோரிக்கை
செவ்வாய், 14 ஜூலை, 2020
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் , நாகர்கோவில் பத்திரிக்கை செய்தி
வியாழன், 9 ஜூலை, 2020
குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி :
வெள்ளி, 3 ஜூலை, 2020
அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம்.....
செவ்வாய், 30 ஜூன், 2020
மாவட்ட ஆட்சித்தலைவரின் இன்றைய செய்திக்குறிப்பு
☞ 05.07.2020 , 12.07.2020 , 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும் .
☞ அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 01.07.2020 முதல் 15.07.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது .
☞ கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் , தளர்வுகளும் 31.07.2020 நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது .
☞ மாவட்டத்திற்குள் இ - பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் .
☞ வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும் , வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும் , மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் , இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் .
☞ கொரோனா பரவல் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது , அதன்படி நாளை ( 01.07.2020 ) முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
☞ கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் எண்ணிக்கையில் வரும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அருகில் ஆறு இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
☞ கொரோனா பரிசோதனைக்காக மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும்போது பொதுமக்கள் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது .
☞ பரிசோதனையை தவிர்க்கும் விதத்தில் பொதுமக்கள் செயல்பட்டால் உண்மையாக மறுக்கப்பட்டவர்கள் விபரம் தெரியாத நேர்வுகளில் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . -
☞ முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 225 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 22500 வசூலிக்கப்பட்டது .
☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 44866 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
☞தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 225 பேர் சிகிச்சையில் உள்ளனர் .
☞ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 206 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .
☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 1797 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 6816 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .
☞ ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் வாரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6318 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
- மாவட்ட ஆட்சித்தலைவர் , கன்னியாகுமரிமாவட்டம் .
#Colacheltoday
வெள்ளி, 19 ஜூன், 2020
மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு 19.6.20
ஞாயிறு, 14 ஜூன், 2020
குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...