வெள்ளி, 5 ஜூலை, 2024

குமரியில் தேசியகொடியை உயர்த்தி பிடித்த கம்பீர கம்பம் ,களை இழந்த சோகம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் 148 அடி உயரமுள்ள தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு, தேசியக்கொடி பறக்க விடப்பட்டது பின்னர் அதிக காற்றால் தேசிய கொடி சேதம் அடைந்தது,


அதனை தொடர்ந்து கொடி அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை தேசிய கொடி பறக்க விடவில்லை,இதனால் வெறுமனே கொடி கம்பம் உள்ளது,எனவே நினைவு சின்னமான தேசிய கொடியை மீண்டும் 148 உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,ஏன் தேசியக் கொடியை அங்கு பறக்க விடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார், இதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


#kanniyakumari #Colacheltoday #nagercoil

போலீசாரின் வாகன தணிக்கையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.



குமரி மாவட்டம் நாகர்கோவில் to கணேசபுரம் சாலையில் இன்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்,

அப்போது அந்த வழியாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஒட்டியது,முறையான பதிவு எண் இல்லாமல் வாகனம் ஒட்டியது,ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது என விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களின் வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

#nagercoil #kanniyakumari #colachel

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது

குமரி மாவட்டம் நாகர்கோவில் கங்காடியா பள்ளி அருகில் ஓடும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணிகளிடம் தங்க செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு


செயினை பறித்து விட்டு பேருந்தில் இறங்கி தப்பமுயன்ற போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து நேசமணிநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர், இதில் தொடர்புடைய இன்னொரு பெண்ணான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இசக்கியம்மாளை குளச்சல் போலீசார் கைது செய்தனர்.


#nagercoil #kanniyakumari #Colachel

வியாழன், 4 ஜூலை, 2024

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி,அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்



குமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட திருப்பதிசாரத்தை சேர்ந்த வெள்ளை கணேசன் (51) என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  ரவுடி ஆவார். நெல்லை ,குமரி மாவட்டங்களில் கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும்   நிலுவையில் உள்ளது.
நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  கணேசன் (எ) வெள்ளை கணேசன் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.  அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம்  IPS அவர்கள்  உத்தரவிட்டிருந்தார்கள்.

உத்தரவின்படி வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. காசிபாண்டியன்    அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கணேசன் (எ) வெள்ளை கணேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதன், 3 ஜூலை, 2024

கட்டாற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம் வீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் நேற்று ஆற்றில் மாடு ஒன்றை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

 இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று சுமார் 3.00 மணியளவில் மணிகண்டன் சடலமாக கண்டு எடுக்கப்பட்டார்

புதிதாக பணிக்கு சேர்ந்த குமரி தொழிலாளி விபத்தில் பலி





குமரி மாவட்டம் கன்னியாகுமரி பணிமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்த பிரபாகரன் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது 

திருச்சி பாடலூர் அருகே சிறுகானுர் என்ற இடத்தில் வைத்து லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்

ஒழுங்கினசேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பள்ளி குழந்தைகள் வாகன ஓட்டிகள் அவதி



குமரி – திருவனந்தபுரம் இடையே நடந்து வரும் இரட்டை ரயில் பாதை பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது.இதற்காக பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய பாலம் அமைக்கும் பணி பாதியில் நிற்கும் நிலையில் கூடுதல் தண்டவாளம் அமைப்பதுடன், பழைய பாலத்தை இடிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது.இதன் காரணமாக தற்போது ஒழுகினசேரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.


நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதி என்பதால், தற்போது நாகர்கோவிலுக்குள் வாகனங்கள் வருவதற்கும், நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் வெளியேறவும் முடியாமல் சிக்கி திணறி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து செல்பவர்கள் அதிக அளவில் செல்வதால் குறுகலான இந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.*

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...