ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டி வரப்பட்ட கனிம வள லாரி ரூ.15000 அபராதம் விதித்து பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், இன்று 07.09.2024 ம் தேதி, நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் வடசேரியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, இரவு 10 மணிக்கு முன்பே நகர்ப்பகுதிக்குள் இயக்கப்பட்ட கனரக லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஓட்டுநர் உரிமம் இன்றி கனிமவள லாரியை இயக்கிய மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு ரூ.10000 அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு லாரியை ஓட்ட அனுமதி அளித்த லாரி உரிமையாளருக்கு ரூ.5000 அபராதமும் ஆக மொத்தம் ரூ.15000 அபராதம் விதித்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
சனி, 7 செப்டம்பர், 2024
தக்கலை அருகே ரேஷன் கடையில் தீ விபத்து
தக்கலை பெருமாள் கோவில் தெருவில் அரசு நியாய விலை கடை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டைகள் மூலம் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ரேஷன் கடையில் இன்று காலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து தீ மளமளவென பரவி ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த கணக்கு புத்தகங்கள், மற்றும் தேயிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பரவியதில் அவை எரிந்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர்.
உடனடியாக இது குறித்து தக்கலை தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ வித்து தவிர்க்கப்பட்டது. பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என தெரிகிறது.
மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி
மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
குலசேகரம் அடுத்த பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவருக்கு சரிகா என்ற மனைவி, தியா , தீரஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் திருவனந்தபுரத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜேஷ் தனது மகன் தீரஜ் - டன் அந்தப் பகுதியில் உள்ள புத்தன்குளம் என்ற குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர் தீரஜ் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து அப்பாவை காணவில்லை என தாயிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட சரிகா அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு குளத்திற்கு சென்றார். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடிய போது, இறந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்த பள்ளி மாணவன் பலி: விஷப்பூச்சி கடித்ததா?
பூதப்பாண்டியை அருகே காட்டுபுதுர் பகுதியை சேர்ந்தவர் தங்க குமாரி இவரது கணவர் கடந்த ஒரு வருடம் முன்பு தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இவருக்கு தனு மற்றும் தனுஷ் சிவா வயது என்ற குழந்தைகள் உள்ளனர். தனு காட்டு புதுர் அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் தங்க குமாரி தன்னுடைய கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனுவும் அவருடைய தம்பி தனுஷ் சிவாவும் வீட்டில் இருந்துள்ளார்கள். காலை சுமார் 11.00 மணியளவில் திடீரென தனு எனக்கு மூச்சு விட முடியவில்லை ஏதோ கடித்துள்ளது போல் தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.
அருகிலுள்ளவர்கள் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தனு இறந்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
வெள்ளி, 6 செப்டம்பர், 2024
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சிலை
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இந்த பாலகம் முன்பு இன்று (செப்.,6) காலை ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலை ஒன்று இருந்தது.
இதைப் பார்த்த அங்குள்ள ஊழியர்கள் நேசமணி நகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விநாயகர் சிலையை அங்கு வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த விநாயகர் சிலையை இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி உள்ளதாக தெரிய வந்தது. அவர் அந்த விநாயகர் சிலையை நேற்று (செப்.,5) ஆவின் பாலகத்திற்கு வெளியே வைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு அந்த சிலையை எடுக்க மறந்து சென்று விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
உடனே சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். அவர் விநாயகர் சிலை வாங்க வருவதாக கூறினார். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த சிலையை உடனடியாக அங்கிருந்த மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் விநாயகர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
காதலி பிரிந்து சென்றதால் அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலை
அம்மாண்டிவிளையை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார்.இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் சுரேஷ் அந்தப் பெண்ணிடம் சென்று சமரசமாகி, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண் அவருடன் செல்ல மறுத்ததால், மனமுடைந்த சுரேஷ், அந்த பெண் வீட்டு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குமரி மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.5) உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வியாழன், 5 செப்டம்பர், 2024
போக்குவரத்து விதிமீறல்: 17 பைக்குகள் பறிமுதல்; ரூ. 75 ஆயிரம் அபராதம்
*கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - 17 அதிவேக வாகனங்கள் அபராதம் விதித்து பறிமுதல்*
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் பதிவெண் இல்லாத அதிவேக இருசக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு அபாயகரமாக ஓட்டுதல், ஸ்டண்ட் செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள், மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் சாதாரண உடையில் ஸ்காட் கல்லூரி சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, சாலை விதிகளை மீறியும் குடிபோதையிலும் ஓட்டி வரப்பட்ட 17 வாகனங்களை சுமார் 75000 ரூபாய் அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் இளைஞர்களின் பெற்றோர், உறவினர் வரவழைக்கப்பட்டு
அறிவுரைகள் வழங்கியும், அபராதங்கள் செலுத்த வைக்கப்பட்டும், பதிவெண் தகடுகள் சரி செய்யப்பட்டும், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரி பகுதிகளில், அதிவேக வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்






