திங்கள், 16 செப்டம்பர், 2024
மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
பேச்சிப்பாறை அடுத்த குற்றியார் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் இளைய மகள் அபிநயா (17). இவர் அங்குள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
நேற்று (செப் 15) ஓணம் பண்டிகை முன்னிட்டு மாலை 6 மணியளவில் அளவில் அபிநயாவும், மற்றொரு இளம் பெண்ணுமாக மாத்தூர் தொட்டி பாலத்தை பார்வையிட சென்றனர். அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்ற கொண்டிருந்தனர்.
அப்போது அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டே சென்றார். பின்னர் அபிநயா செல்போனில் எதிர்முனையில் பேசியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கே சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்
சனி, 14 செப்டம்பர், 2024
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வில்லிவிளையைச் சேர்ந்தவர் டெம்போ டிரைவர் முருகேசன் (52). இவர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் முருகேசனை தேடி வந்த நிலையில், நேற்று (செப்.,13) ஈத்தாமொழியில் வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
_____________________________________________________________________________________________
செய்தி துளிகள்: குமரி மாவட்டம்
திங்கள் நகர்: மினிபேருந்து ஓட்டுநர்-பேரூராட்சி ஊழியர் மோதல்
திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மினி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது. இதற்கு பேரூராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும் மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
_____________________________________________________________________
_________________________
கைது செய்யப்பட்ட துணை சர்வேயருக்கு நீதிமன்ற காவல்
நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட கிள்ளியூர் தாலுகா துணை சர்வேயர் சிறையில் நேற்று(செப்.13) அடைக்கப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் (பொறுப்பு) நீதிபதி உத்தரவிட்டார். நில அளவை செய்வதற்காக லஞ்சம் வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
_______________________________________________________________________________________________
குமரி அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு
குமாரபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன் இவர் சித்திரங்கோட்டில் மகள் வீட்டில் இருந்தார். மகளின் மகன் ராஜசேகருக்கு சொந்தமான காரை 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் போர்டிகோவில் ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி வைத்திருந்தார். 12ம் தேதி கார் உருண்டு முத்தையன் மீது மோதியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்
this
வியாழன், 12 செப்டம்பர், 2024
குமரி : கள்ளக்காதலுடன் ஓட முயன்ற 42 வயது பள்ளி ஆசிரியை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது வீட்டிற்கு உறவுக்கார வாலிபர் ஒருவார் வந்து செல்வது வழக்கம். பின்னர் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்த விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஒருநாள் வாலிபரும் ஆசிரியையும் உல்லாசமாக இருப்பதை கண்டு பிரச்சனை ஏற்பட்டு, மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதில் ஆசிரியை காது கிழிந்து தொங்கி உள்ளது.
இதற்கிடையில் மீண்டும் கள்ளக்காதலன் காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்த நேரம், ஆசிரியை கணவர் திடீரென வந்ததால் மீண்டும் வாலிபரை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்றது. போலீசார் ஆசிரியை மற்றும் அவரது கணவர், கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியை கள்ளக்காதலுடன் தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாய் இருந்தார். போலீசார் பலமுறை சமாதானம் செய்தும் ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் போலீசார் ஒரு வழியாக அந்த ஆசிரியை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்
1000 மேற்பட்ட கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய கன்னியாகுமரி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று முன்தினம் (செப்.,10) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே இன்று (செப்., 12) நடைபெறுகிறது.
இந்நிலையில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி, சன்னதி தெரு, படகு தளம் செல்லும் சாலை, கடற்கரை சாலை, சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது
புதன், 11 செப்டம்பர், 2024
குழந்தைகளை தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்ற பெண்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஊரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த 25 வயது கார் டிரைவர் ஒருவருடன் அந்த பொண்ணுக்கு பழக்கமாகி, அது கள்ளக் காதலாக மாறி அவர்கள் பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.
இதை அறிந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் அறிவுரை கூறியதும் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 35 பவன் தங்க நகைகள், ரூபாய் 85 ஆயிரத்துடன் மாயமானார்.
இது தொடர்பாக கணவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். நேற்று (செப்.,10) அந்த கள்ளக்காதல் ஜோடி மார்த்தாண்ட போலீஸ் நிலையம் வந்துள்ளது. அப்போது கணவரும் குழந்தைகளும் அந்த பெண்ணிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவள் கணவரிடம் வாழ முடியாத என கூறி கழுத்தில் கிடந்த தாலி மற்றும் நகைகள், பணம் போன்றவற்றை வீசி எறிந்து விட்டு கள்ளக்காதலுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த பெண் ஒரு ஆட்டோ வரவழைத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தார்
செவ்வாய், 10 செப்டம்பர், 2024
சர்வதேச மகளிர் வாள்போட்டி கன்னியாகுமரி மாவட்ட மாணவி பங்கேற்பு
சர்வதேச மகளிர் வாள் விளையாட்டுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த என். வி ஜெனிஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அவருடன் மேலும் ஆறு பேர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர்.
ஜெனிஷா 12-ம் வகுப்பு மாணவியாவார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் சார்பில் ஆற்றூர் அடுத்த கல்லுப்பாலம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவியை கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக தலைவர் சிந்துகுமார், செயலாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் செல்வகுமார் உட்பட பலர் பாராட்டி உள்ளனர்.
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பு
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புப் படையினர் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் திங்கள்கிழமை காலை நல்ல பாம்பு பதுங்கியிருப்பதைப் பார்த்த பணியாளர்கள் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்குகு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், தீயணைப்பு மீட்புப் படையினர் வந்து பாம்பைப் பிடித்தனர். அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், பின்னர், அந்தப் பாம்பு வனப் பகுதியில் விடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...