வியாழன், 7 மே, 2020

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி மீது தாக்குதல்



ஆரல்வாய்மொழி அருகே திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), டெம்போ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் அவரது மனைவி ராதிகா ஆகியோர் மோதலை விலக்கி விட சென்றனர்.
அப்போது, கார்த்திக்கும் அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து ‘ இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நீங்கள்தான்’ எனக்கூறி கண்ணனையும் அவரது மனைவியையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் கள்ளக்காதலி மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதன், 6 மே, 2020

சென்னையில் இருந்து வந்தவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

சென்னையில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் நபர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சளி, ரத்தம் மாதிரி எடுத்த பிறகு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈசாந்திமங்கலத்தில் ஒரு வீடு, பூதப்பாண்டியில் 2 வீடு, திட்டுவிளையில் 2 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, அங்கு 8 பேர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது




கருங்கல் அருகே நேராகாட்டுவிளையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை செய்த போது பிரபின் ஆன்டனி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து பிரபின் ஆன்டனியை போலீசார் கைது செய்து 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

திங்கள், 4 மே, 2020

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் சார்பில் முக கவசம் வினியோகம்

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் 

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜமணி தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், கிரீசன் ஆகியோர் முன்னிலையில் 250 முக கவசங்கள் கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாளிடம் வழங்கப்பட்டது. போலீசார், அந்த முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.



ஞாயிறு, 3 மே, 2020

கள்ளச்சாராயம் விற்றவர் கைது





மார்த்தாண்டத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் மற்றும் போலீசார் குமாரகோவில் அருகே உள்ள வேளிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆனைக்கல் ஓடையில் நாகக்கோடு காட்டு குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 53) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செல்வகுமார் கள்ளச்சாராயத்தை நீண்ட காலமாக காய்ச்சி விற்றது தெரிய வந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராய ஊறலையும் அவர்கள் கைப்பற்றி அழித்தனர்.


சனி, 2 மே, 2020

நாகர்கோவிலில் முக கவசம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூல்

நாகர்கோவிலில்

முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 



நாகர்கோவிலில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் பகுதியில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



வெள்ளி, 1 மே, 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதாககுமரியில் 37 நாட்களில் 6,708 வழக்குகள் பதிவு5,282 வாகனங்கள் பறிமுதல்





கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தேவையின்றி வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 75 வழக்குகள் பதிவு செய்து, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை 37 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...