வெள்ளி, 29 மே, 2020

குமரி மாவட்டசெய்தி துளிகள் சில


✓அஞ்சுகிராமத்தில் கட்டப்பட்டுள்ள
ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

✓குமரியில் +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.

✓குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

✓புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார் .

வியாழன், 21 மே, 2020

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


தாழக்குடி மேலகாலனி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி தாசம்மாள் (44). சம்பவத்தன்று தாசம்மாள் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் தாசம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசம்மாள், பாஸ்கரனின் தந்தை கிறிஸ்துதாஸிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் தாசம்மாள் தரப்பினரும், கிறிஸ்துதாஸ் தரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாசம்மாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிறிஸ்துதாஸ், அவருடைய மனைவி மார்த்தாள், மகன்கள் பாஸ்கர், சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல கிறிஸ்துதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், அவருடைய மனைவி தாசம்மாள், மகன்கள் சாருஹாசன், சுனில் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 18 மே, 2020

தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை



குலசேகரம் அருகே நாகக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27), ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐஸ்வர்யா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு



திருவட்டார் அருகே செறுகோல் குற்றிமாவிளையில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. நேற்று காலையில் ஆலயத்தை சுத்தம் செய்வதற்காக சபை பணியாளர் ராபின் சென்றார். அப்போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, ஆலயத்தின் பின்பக்கத்தில் உள்ள அறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற மின்சார பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மூடை கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்களை மர்ம நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். மேலும், சில பொருட்களை மூடை கட்டி விட்டு கொண்டு செல்ல முடியாததால் அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சபை செயலாளர் சிம்சோன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஞாயிறு, 17 மே, 2020

குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் காமராஜர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மழை காரணமாக சாஸ்தான்கரையில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக கார், டெம்போ போன்ற வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுமரங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மழை, காற்று காரணமாக கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கட்டுமரங்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.



வெள்ளி, 15 மே, 2020

விபத்தில் 2 பேர் காயம்



இரணியல் அருகே நெய்யூர் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் மோட்டார் சைக்கிளில் மேக்கா மண்டபத்தில் இருந்து அழகியமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

பின்னால் அவர் நண்பர் ரவீந்திரன் உட்கார்ந்து இருந்தார். பிலாங்காலை பகுதியில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன், ரவீந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தக்கலை மணலி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




வியாழன், 14 மே, 2020

மார்த்தாண்டம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது



மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 38), தொழிலாளி. இவர், 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை தேடி வந்தனர். இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரெஜியை கைது செய்தனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...