வியாழன், 22 ஆகஸ்ட், 2024

குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் அறை எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 2 சிறுமிகள் உள்பட 4 பேரையும் மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நான்கு
பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பத இரண்டு சிறுமிகளும், சிறுவனும் 17 வயதுடையவர்கள் என்பதும் இவர்கள் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களுடன் இருந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்றும் அவரது பெயர் சந்தீஷ்குமார் (வயது 22) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் காதல் ஜோடி என போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சந்தீஷ்குமார், லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் (62), மேலாளர் சிவன் (54) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் 17 வயது சிறுவனையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதில் லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...