ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது

தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காப்புக் காட்டில் உள்ள அரசு உணவு பொருள் குடோனில் லோடு மேனாக வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது

திருவட்டாரை அடுத்த வீயன்னூரில் வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் போலீசார் தேடிய நிலையில் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்த பிரபல கொள்ளையனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சனி, 24 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு நடத்தினர் அபராதம் விதிப்பு



குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரியில் கீழரத வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பெண் கடத்தி கொலை: கணவரின் தம்பிக்கு ஆயுள் தண்டனை




குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த ஜோஸ் மனைவி கவிதா . ஜோஸின் தம்பி சசிகுமார் கார் டிரைவர். 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரி கடலில் செத்து மிதந்த மீன்கள்


கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் ஒரு பறம் சீற்றமாகவும் மறுபுறம் உள்வாங்கியும் காணப்பட்டது. இதற்கிடையில் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக கடலில் மழை வெள்ளம் வந்து கலந்தபடி இருந்தது. இதனால் கடலின் நிறமே மாறி செம்மண் கலந்தது போன்று சிகப்பு நிறத்தில் தென்பட்டது


மேலும் கடல் நீரும் கடுமையான குளிராக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி



குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் அறை எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 2 சிறுமிகள் உள்பட 4 பேரையும் மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நான்கு
பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பத இரண்டு சிறுமிகளும், சிறுவனும் 17 வயதுடையவர்கள் என்பதும் இவர்கள் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களுடன் இருந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்றும் அவரது பெயர் சந்தீஷ்குமார் (வயது 22) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் காதல் ஜோடி என போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சந்தீஷ்குமார், லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் (62), மேலாளர் சிவன் (54) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் 17 வயது சிறுவனையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதில் லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கன்னியகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்கிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்தில் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக பலர், மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு. கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டது. இதையடுத்து எனது கல் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்குள் குவாரி அமைந்து இருப்பதாக அறிக்கை அளித்து, என்னுடைய குவாரி உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்தனர். இந்த உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரருக்கு கல் குவாரி உரிம சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்த பகுதியில் 10 வீடுகள் உள்ளன என்று 2011- ஆண்டில் வருவாய் கேட்டாட்சியர், கனிமவள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ள னர். 2015-ம் ஆண்டில் அந்த கட்டிடங்கள் அனைத்தும் பண்ணை வீடுகள்தான் என அப்போதைய கனிமவள உதவி இயக்குனர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பேரில் எந்திரத்தனமாக குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு குவாரி தொடர்ந்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகளின் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. அதேநேரம் மனுதாரரின் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் பொரு ளாதார பாதிப்பை அவர் சந்தித்து உள்ளார். அதிகாரிகள் வேண்டுமென்றே தவறு செய்ததால், மனுதாரருக்கு அவர்கள் இழப்பீட்டை வழங்குவது அவசியம். எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதார ருக்கு இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் தவறு செய்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...