ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது

திருவட்டாரை அடுத்த வீயன்னூரில் வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் போலீசார் தேடிய நிலையில் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்த பிரபல கொள்ளையனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு கொள்ளையர்கள் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவட்டாரை அடுத்த வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் மோகனதாஸ் . கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நள்ளிரவு மோகனதாஸ் வீட்டுக்குள் புகுந்த 2 மர்மஆசாமிகள் அவரை இரும்பு கம்பியால் தாக்கியதோடு அவரது மகளையும் கையால் அடித்தனர். பின்னர் இருவரையும் மிரட்டி 79 பவுன் நகைகளை மர்மஆசாமிகள் கொள் ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையில் துப்பு துலக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு பகுதிகளுக்கும் தனிப்படையினர் சென்று கொள்ளையர்கள் பற்றி விசாரித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் களியக்காவிளையில் தனிப்படையினர் ரோந்து சென்றபோது ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மானுகொண்டா அனில்குமார் (34) சிவகாசியை சேர்ந்த பார்த்தீபன் (23), திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (38) ஆகிய 3 பேரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதில் பார்த்தீபனும், சுப்பிரமணியும் போலீசாரிடம் சிக்கினர். அதே சமயத்தில் பனங்காலை ரெயில்வே பாலத்தில் இருந்து கீழே குதித்த அனில்குமாரின் கால் முறிந்தது. இவர்கள் 3 பேரும் தொழிலதிபர் மோகனதாஸ் வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. கோவை சிறையில் இருந்த போது தஞ்சாவூரை சேர்ந்த கிரி என்பவர் தொழிலதிபர் மோகனதாஸ் வீட்டில் கொள்ளையடிக்கலாம் என அங்கு சிறையில் இருந்த அனில்குமார். பார்த்தீபன், சுப் பிரமணி
ஆகிய 3 பேரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அனில்குமார். பார்த்தீபன் திட்டமிட்டபடி குமரிக்கு வந்து தொழிலதிபர் மோகனதாஸ் வீட்டை ஒருநாள் முழுவதும் நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டி சென்றது தெரியவந்தது. இந்த நகையை விற்க திருப்பூர் சுப்பிரமணியை நாடியுள்ளனர். ஆனால் திருட்டு நகை என்பதால் குறைந்த விலைக்கு தான் செல்லும் என கூறியதால் அப்போது 3 பேரும் நகையை விற்கவில்லை. இந்தநிலையில் நகைகளை எடுத்துக் கொண்டு குமரிக்கு வந்த போது 3 பேரும் போலீசில் சிக்கியது அம்பலமானது. இதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபன், சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே சமயத்தில் கால்முறிந்த பிரபல கொள்ளையனான அளில்குமாருக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இவர் உடல்நலம் தேறி இயல்பு நிலைக்கு திரும்பியதும் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். விபசாரத்தில் இருந்து திருட்டுக்கு மாறினார் கால் முறிந்த அனில்குமார் மீது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் சிவகாசி பார்த்தீபன் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன. அதே சமயத்தில் திருப்பூர் சுப்பிரமணி மீது பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் தான் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் தான் மற்ற 2 பேர் கைவரிசை காட்டிய நகைகளை விற்க அவர் உதவிபுரிய முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார். இதுதான் அவர் மீது பதிவான முதல் திருட்டு வழக்கு என கூறப்படுகிறது. மேலும் சுப்பிரமணி விபசார வழக்கில் சிறைக்கு சென்றதால் அவ ருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த துணிகர கொள்ளைக்கு மூளையாக இருந்த தஞ்சையை சேர்ந்த கிரி தற்போது கோவை சிறைசாலையில் உள்ளார். எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். இந்த கொள்ளையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...