வியாழன், 22 ஆகஸ்ட், 2024

விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கன்னியகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்கிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்தில் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக பலர், மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு. கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டது. இதையடுத்து எனது கல் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்குள் குவாரி அமைந்து இருப்பதாக அறிக்கை அளித்து, என்னுடைய குவாரி உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்தனர். இந்த உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரருக்கு கல் குவாரி உரிம சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்த பகுதியில் 10 வீடுகள் உள்ளன என்று 2011- ஆண்டில் வருவாய் கேட்டாட்சியர், கனிமவள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ள னர். 2015-ம் ஆண்டில் அந்த கட்டிடங்கள் அனைத்தும் பண்ணை வீடுகள்தான் என அப்போதைய கனிமவள உதவி இயக்குனர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பேரில் எந்திரத்தனமாக குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு குவாரி தொடர்ந்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகளின் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. அதேநேரம் மனுதாரரின் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் பொரு ளாதார பாதிப்பை அவர் சந்தித்து உள்ளார். அதிகாரிகள் வேண்டுமென்றே தவறு செய்ததால், மனுதாரருக்கு அவர்கள் இழப்பீட்டை வழங்குவது அவசியம். எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதார ருக்கு இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் தவறு செய்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...