கடந்த 2011.12. 1-ஆம் தேதி கவிதாவின் தம்பி ஜான் கிறிஸ்டோபருக்கு பணம் அனுப்பிய ஜோஸ், அடகு வைக்கப்பட்ட கவிதாவின் நகைகளை மீட்டுக் கொடுக்குமாறு தெரிவித்தார். இதன்படி, ஜான்கிறிஸ்டோபர் மீட்கப்பட்ட நகைகளையும், மீதியிருந்த பணத்தையும் கவிதாவிடம் கொடுத்துள்ளார்.
அடுத்த நாள் பணம் மற்றும் நகைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு கவிதா செல்ல இருப்பதை அறிந்த சசிகுமார், அவரை காரில் அழைத்துச் செல்வதாகக் கூறி புதுக்கடைக்கு
கடத்திச் சென்றுள்ளார். காரிலேயே பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது சடலத்தை நாகர்கோவில் அருகே உள்ள தாழக்குடி புதுக்குளம் சுடுகாடு அருகே வீசியுள்ளார்.
பின்னர் கவிதா வைத்திருந்த ரூ. 1.22 லட்சம் மதிப்பு நகை மற்றும் பணத்துடன் தப்பிச்சென்றார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குபதிந்து சசிகுமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா கொலை, தடயங்களை மறைத்தது, கொள்ளை, பாலியல் பலாத்கார முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் சசிகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூபாய் மூன்று ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக