ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது
தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது
தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காப்புக் காட்டில் உள்ள அரசு உணவு பொருள் குடோனில் லோடு மேனாக வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் மரம் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இதில் அண்ணன் சூரியா பொறுப்பற்ற முறையில் அதிக செலவு செய்து வந்துள்ளார். மேலும் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்வது வழக்கமாம்.
மேலும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவதும், அந்த பணத்தை
தந்தையும், ஆனந்தும் திருப்பி கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஜெயக்குமார் வேலைக்கு சென்று விட்டார். தாயும் மகளும் வெளியே சென்றிருந்தனர். மதியம் சூரியாவும், ஆனந்தும் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஆயுதங்களால் மோதும் நிலை ஏற்பட்டது.
அப்போது ஆனந்த் ஆத்திரத்தில் அண்ணன் சூரியாவை வெட்டினார். இதில் சூரியா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். புதுக்கடை போலீசார் உடலை மீட்டு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோட முயன்ற தம்பி ஆனந்தை கருங்கல் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக