சனி, 24 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு நடத்தினர் அபராதம் விதிப்பு



குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரியில் கீழரத வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின்போது குளிர் பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப் பட்டிருந்த பழைய இறைச்சி, சுண்டல், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு மசாலா, கிரேவி உட்பட 15 கிலோ உணவு பொருட்கள் மற்றும் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ எடையுள்ள காய்கறிகள் மேலும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே


பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் இரண்டு கிலோ ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.

மேலும் மனித உணவுக்கு தகுதி இல்லாத செயற்கை நிறமிகள் சேர்ந்த 5 கிலோ எடையுள்ள கலர் அப்பளம் மளிகை கடையில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டது. சுகாதாரமற்ற முறையில் இயங்கும் கடைகள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து உணவகங்கள் உட்பட 5 கடைகளுக்கு 7000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


இதில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததாக மளிகை கடைக்கு ரூபாய் இராண்டாயிரம் கூடுதலாக உட்பட ஐந்து கடைகளுக்கும் தலா ரூபாய் ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...