கன்னியாகுமரிமாவட்ட பொதுப்பணித்துறை,நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ,பஞ்சாயத்துதுறை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் மொத்தம் 609 குளங்களிலிருந்து இலவச மண் எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சி தலைவர் ஶ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்,
இதற்கு தாசில்தார் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் உரிய விண்ணப்பதாரர்களிடமிருந்து online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் tne- sevai.tn.gov.in இணைய முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது .
#kanniyakumari #collector #colacheltoday #kulam #tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக