மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம் IPS அவர்கள்* உத்தரவில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீவிர வாகன சோதனையானது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், தவறான நோக்கத்துடன் ஆயுதங்கள் வைத்திருத்தல், மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவை சம்பந்தமாக மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
வாகன சோதனையில் வாகன ஓட்டுனரின் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளார்களா என சோதனை இடப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக