புதன், 31 ஜூலை, 2024

குமரியில் 2.8.24 அன்று மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்

02.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை,வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதே போல்


02.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்,
மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


#Nagercoil #kanniyakumari #powercut




புதன், 24 ஜூலை, 2024

குமரி மாவட்டத்தில் நாளை எங்கு எல்லாம் மின்தடை .

25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்,மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மீனாட்சிபுரம், கோட்டார்,
வடிவீஸ்வரம், இடலாகுடி,செட்டிகுளம் சந்திப்பு , கணேசபுரம், வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், 
 ஓழுகினசேரி, ராஜாபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.


25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் 02:00 மணி வரை தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், புத்தளம், பள்ளம், புத்தன்துறை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்து கொள்கிறோம்.


#Powercut #kanniyakumari #nagercoil
#Colacheltoday

வியாழன், 18 ஜூலை, 2024

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஆடி மாத பிறப்பை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது- நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர்- மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 400க்கும்,பிச்சி பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது


பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் உற்பத்தி பெருகி உள்ளதாலும் ஆடி மாதம் எதிர்பார்த்த விலை உயர வில்லை,இன்னும் நாட்கள் செல்லச் செல்ல பூக்களின் விலை உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்- இதில் அரளிப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் 125 ரூபாய்க்கும், வாடாமல்லி 40 ரூபாய்க்கும்,சிவப்பு கிரேந்தி 60 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ 20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த வண்ண பூக்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

புதன், 17 ஜூலை, 2024

19, 20 தேதிகளில் குமரியில் எங்கெல்லாம் மின் தடை

தேங்காய்ப்பட்டணம், முன்சிறை, நடைக்காவு பகுதியில் 19.7.2024 வெள்ளிக்கிழமை 
மின்தடை

முஞ்சிறை,காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம்,பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், இராமன்துறை, புத்தன் துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம் சென்னித்தோட்டம், ஆகிய இடங்களுக்கும் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.

இதேபோன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் 
நடைக்காவு , சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரை மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.




மார்த்தாண்டம் பகுதியில் 20.7.2024 சனிக்கிழமை 
மின் தடை 

 மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

சனி, 13 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாரந்திர கவாத்து  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து  இன்று (13/07/2024) நடைபெற்றது.

 இதில் காவலர்களுக்கு ஆயுதங்களின் செயல்பாடு குறித்தும் அதனை சிறப்பாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். 

 இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. செந்தாமரை கண்ணன் குற்றப்பிரிவு (ஆயுதப்படை பொறுப்பு) மற்றும் திரு. செல்லசுவாமி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 12 ஜூலை, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் தீவிர வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம்  IPS அவர்கள்* உத்தரவில்  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த தீவிர வாகன சோதனையானது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், தவறான நோக்கத்துடன் ஆயுதங்கள் வைத்திருத்தல்,  மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுதல்  ஆகியவை சம்பந்தமாக  மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

  வாகன சோதனையில் வாகன ஓட்டுனரின் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளார்களா என  சோதனை இடப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

அண்ணாமலையை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பொய்யான தகவல்கள் கூறி வருகிறார் அவரது செயலை கண்டிக்கும் விதமாக தமிழக முழுவதும் காங்கிரஸார் அண்ணாமலையின் புகைப்படம் எரிப்பு கிளிப்பு என எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர், 

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர்.நவீன்குமார் குமார் தலைமையில் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.எம் பி விஜயசந்த்விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாரகை கட்பர்ட் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு அண்ணாமலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

திங்கள், 8 ஜூலை, 2024

கன்னியாகுமரியில் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு



கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதியில் புதிதாக மாவட்டக் காவல்துறையால் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று (08.07.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E. சுந்தரவதனம் IPS* அவர்கள் திறந்து வைத்தார்.

 புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 34 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை புறக்காவல் நிலையத்தில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்கள் மற்றும் கடல் சீற்ற காலங்களில் கடற்கரையில் இருக்கும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. நெப்போலியன், கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

#KanniyakumariDistrictPolice 
#szsocialmedia1 
#tamilnadupolice 
#TruthAloneTriumphs #kanniyakumari
#Colacheltoday 

ஞாயிறு, 7 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி



கன்னியாகுமரிமாவட்ட பொதுப்பணித்துறை,நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ,பஞ்சாயத்துதுறை  ஊரக வளர்ச்சித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் மொத்தம் 609 குளங்களிலிருந்து இலவச மண் எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சி தலைவர்  ஶ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்,      

இதற்கு தாசில்தார் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் உரிய விண்ணப்பதாரர்களிடமிருந்து online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் tne- sevai.tn.gov.in  இணைய முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது .


#kanniyakumari #collector #colacheltoday #kulam #tamilnadu 

சனி, 6 ஜூலை, 2024

மயிலாடியில் தற்கொலைக்கு மனைவியை தூண்டியவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில்

குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர்  ரவி, புத்தளம் பகுதியை  சேர்ந்தவர் விஜி  , இருவரும் 2011 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர்
இந்நிலையில் மனைவி விஜியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு ரவி அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் விஜி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த வழக்கில் நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ரவிக்கு ஏழுஆண்டுகள்  சிறை தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபாராதமும்  விதித்து தீர்ப்பு அளித்தது.

#kanniyakumari #colachel #myladi #nagercoil 

வெள்ளி, 5 ஜூலை, 2024

குமரியில் தேசியகொடியை உயர்த்தி பிடித்த கம்பீர கம்பம் ,களை இழந்த சோகம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் 148 அடி உயரமுள்ள தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு, தேசியக்கொடி பறக்க விடப்பட்டது பின்னர் அதிக காற்றால் தேசிய கொடி சேதம் அடைந்தது,


அதனை தொடர்ந்து கொடி அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை தேசிய கொடி பறக்க விடவில்லை,இதனால் வெறுமனே கொடி கம்பம் உள்ளது,எனவே நினைவு சின்னமான தேசிய கொடியை மீண்டும் 148 உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,ஏன் தேசியக் கொடியை அங்கு பறக்க விடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார், இதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


#kanniyakumari #Colacheltoday #nagercoil

போலீசாரின் வாகன தணிக்கையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.



குமரி மாவட்டம் நாகர்கோவில் to கணேசபுரம் சாலையில் இன்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்,

அப்போது அந்த வழியாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஒட்டியது,முறையான பதிவு எண் இல்லாமல் வாகனம் ஒட்டியது,ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது என விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களின் வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

#nagercoil #kanniyakumari #colachel

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது

குமரி மாவட்டம் நாகர்கோவில் கங்காடியா பள்ளி அருகில் ஓடும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணிகளிடம் தங்க செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு


செயினை பறித்து விட்டு பேருந்தில் இறங்கி தப்பமுயன்ற போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து நேசமணிநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர், இதில் தொடர்புடைய இன்னொரு பெண்ணான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இசக்கியம்மாளை குளச்சல் போலீசார் கைது செய்தனர்.


#nagercoil #kanniyakumari #Colachel

வியாழன், 4 ஜூலை, 2024

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி,அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்



குமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட திருப்பதிசாரத்தை சேர்ந்த வெள்ளை கணேசன் (51) என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  ரவுடி ஆவார். நெல்லை ,குமரி மாவட்டங்களில் கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும்   நிலுவையில் உள்ளது.
நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  கணேசன் (எ) வெள்ளை கணேசன் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.  அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம்  IPS அவர்கள்  உத்தரவிட்டிருந்தார்கள்.

உத்தரவின்படி வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. காசிபாண்டியன்    அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கணேசன் (எ) வெள்ளை கணேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதன், 3 ஜூலை, 2024

கட்டாற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம் வீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் நேற்று ஆற்றில் மாடு ஒன்றை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

 இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று சுமார் 3.00 மணியளவில் மணிகண்டன் சடலமாக கண்டு எடுக்கப்பட்டார்

புதிதாக பணிக்கு சேர்ந்த குமரி தொழிலாளி விபத்தில் பலி





குமரி மாவட்டம் கன்னியாகுமரி பணிமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்த பிரபாகரன் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது 

திருச்சி பாடலூர் அருகே சிறுகானுர் என்ற இடத்தில் வைத்து லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்

ஒழுங்கினசேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பள்ளி குழந்தைகள் வாகன ஓட்டிகள் அவதி



குமரி – திருவனந்தபுரம் இடையே நடந்து வரும் இரட்டை ரயில் பாதை பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது.இதற்காக பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய பாலம் அமைக்கும் பணி பாதியில் நிற்கும் நிலையில் கூடுதல் தண்டவாளம் அமைப்பதுடன், பழைய பாலத்தை இடிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது.இதன் காரணமாக தற்போது ஒழுகினசேரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.


நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதி என்பதால், தற்போது நாகர்கோவிலுக்குள் வாகனங்கள் வருவதற்கும், நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் வெளியேறவும் முடியாமல் சிக்கி திணறி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து செல்பவர்கள் அதிக அளவில் செல்வதால் குறுகலான இந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.*

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...