செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலீஸ் குவிப்பு

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசங்கத்தால் தடை செய்யப்பட்ட காச்சா மூச்சா வலையை சில மீனவர்கள் மறைமுகமாக அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், தடை செய்யப்பட்ட வலையை பயன் படுத்தக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


  இந்நிலையில் இனயம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகை வைத்து தடை செய்யப்பட்ட காச்சா முச்சா வலைய கொண்டு போய் கணவாய் மீன் பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு இதே கடற்கரை கிராமத்தை சேர்ந்த மற்றொருவர்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மீனவர்கள் இரு தரப்பாக பிரிந்து மாறி மாறி கோஷ்டி முதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல் புதுகடை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீன்வளத்துறை ஆய்வாளர் லிபின் மேரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட வலையுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளார். தொடர்ந்து தடை செய்யப்பட்ட வகையை மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...