செவ்வாய், 28 ஏப்ரல், 2020

வெளிநாட்டில் இறந்தகுமரி கொத்தனாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்





குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜில்குமார் (வயது 47). இவருடைய மனைவி விஜயா (45). இவர்களுக்கு அஜீஷா (21) என்ற மகளும், அருண் (20) என்ற மகனும் உள்ளனர். அஜில்குமார் கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் இருந்தார். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அங்கு தங்கியிருந்த அறையில் முடங்கினார். அப்போது, திடீரென அவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ஆஸ்பத்திரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அதே சமயத்தில், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால், 13 நாட்களாக கொத்தனார் உடல் அங்கேயே உள்ளது. இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து அஜில்குமார் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...