ஊரடங்கை மீறி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.
இந்நிலையில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மருதவிளை கொற்றிகுளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் அழகியமண்டபம் பனங்காலவிளை பகுதியை சேர்ந்த ராஜன்(வயது 39), அருள்(39), ஸ்டான்லி(32), சதீஷ்(29) ஆகிய 4 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக