சனி, 31 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் அருகே வள்ளத்தில் இருந்து கடலில் விழுந்த மீனவர் பரிதாப சாவு

தேங்காப்பட்டணம் அடுத்த இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாசன் மகன் ஆரோக்கிய நிதின் இவர் தனது தம்பியான நிதிஷ் என்பவரின் பைபர் வள்ளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். 

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் போலீசாரால் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விபச்சாரம் நடைபெற்ற வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு
சோதனை மேற்கொண்டதில் மூன்று அழகிகள் மற்றும் 2 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகரில் தனி வீட்டில் வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதன், 28 ஆகஸ்ட், 2024

குமரி: இந்திய பாஸ்போர்ட்டை சட்ட விரோதமாக எடுத்த இலங்கை அகதி கைது

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் Sri Lanka அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலீஸ் குவிப்பு

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசங்கத்தால் தடை செய்யப்பட்ட காச்சா மூச்சா வலையை சில மீனவர்கள் மறைமுகமாக அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், தடை செய்யப்பட்ட வலையை பயன் படுத்தக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

Sunita & Butch Might Have To Drink Recycled Urine

Sunita Williams & Butch Willmore Might Have To Drink Recycled Urine While Stuck In Space Astronauts Sunita Williams & Butch Willmore might end up drinking recycled urine while stuck in space, claimed Meganne Christian, a member of the European Space Agency (ESA), as per reports.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது

தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காப்புக் காட்டில் உள்ள அரசு உணவு பொருள் குடோனில் லோடு மேனாக வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது

திருவட்டாரை அடுத்த வீயன்னூரில் வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் போலீசார் தேடிய நிலையில் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்த பிரபல கொள்ளையனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சனி, 24 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு நடத்தினர் அபராதம் விதிப்பு



குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரியில் கீழரத வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பெண் கடத்தி கொலை: கணவரின் தம்பிக்கு ஆயுள் தண்டனை




குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த ஜோஸ் மனைவி கவிதா . ஜோஸின் தம்பி சசிகுமார் கார் டிரைவர். 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரி கடலில் செத்து மிதந்த மீன்கள்


கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் ஒரு பறம் சீற்றமாகவும் மறுபுறம் உள்வாங்கியும் காணப்பட்டது. இதற்கிடையில் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக கடலில் மழை வெள்ளம் வந்து கலந்தபடி இருந்தது. இதனால் கடலின் நிறமே மாறி செம்மண் கலந்தது போன்று சிகப்பு நிறத்தில் தென்பட்டது


மேலும் கடல் நீரும் கடுமையான குளிராக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி



குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் அறை எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 2 சிறுமிகள் உள்பட 4 பேரையும் மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நான்கு
பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பத இரண்டு சிறுமிகளும், சிறுவனும் 17 வயதுடையவர்கள் என்பதும் இவர்கள் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களுடன் இருந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்றும் அவரது பெயர் சந்தீஷ்குமார் (வயது 22) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் காதல் ஜோடி என போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சந்தீஷ்குமார், லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் (62), மேலாளர் சிவன் (54) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் 17 வயது சிறுவனையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதில் லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கன்னியகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்கிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்தில் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக பலர், மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு. கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டது. இதையடுத்து எனது கல் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்குள் குவாரி அமைந்து இருப்பதாக அறிக்கை அளித்து, என்னுடைய குவாரி உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்தனர். இந்த உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரருக்கு கல் குவாரி உரிம சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்த பகுதியில் 10 வீடுகள் உள்ளன என்று 2011- ஆண்டில் வருவாய் கேட்டாட்சியர், கனிமவள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ள னர். 2015-ம் ஆண்டில் அந்த கட்டிடங்கள் அனைத்தும் பண்ணை வீடுகள்தான் என அப்போதைய கனிமவள உதவி இயக்குனர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பேரில் எந்திரத்தனமாக குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு குவாரி தொடர்ந்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகளின் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. அதேநேரம் மனுதாரரின் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் பொரு ளாதார பாதிப்பை அவர் சந்தித்து உள்ளார். அதிகாரிகள் வேண்டுமென்றே தவறு செய்ததால், மனுதாரருக்கு அவர்கள் இழப்பீட்டை வழங்குவது அவசியம். எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதார ருக்கு இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் தவறு செய்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கடலில் பலத்த காற்று: படகில் தவறி விழுந்த தூத்தூர் மீனவர் பலி

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (50). மீன்பிடி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை பூத்துறை என்ற பகுதியை சேர்ந்த ஜோன் பிராய் என்பவருக்கு சொந்தமான படகில் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றார். இவருடன் ஜான் உட்பட எட்டு மீனவர்கள் உடன் இருந்தனர். நேற்று அதிகாலையில் ஆழ்கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆழ்
கடலில் பலத்த காற்று வீசி உள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் ஷாஜி படகின் உள்ளே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிமந்துள்ளார். சக மீனவர்கள் ஷாஜியின் உடலை தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குளச்சல் கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புதன், 21 ஆகஸ்ட், 2024

சிறுமி மாயம் குமரி ரயில் நிலையங்களில் தேடுதல்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். சென்ற மாதம் குடும்பத்துடன் திருவனந்தபுரம் வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் 13 வயதான தஸ்மிக் தம்சம் என்ற மகள் உட்பட 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அன்வரும் மனைவியும் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தஸ்மீ க் தம்சத்தை வீட்டில் இருந்து காணவில்லை. இது குறித்து அன்வர் உசேன் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தஸ்மிக் திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில் கன்னியாகுமரி ரயில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்தது. அவர் ரயிலில் இருப்பது போன்ற ஒரு போட்டோ போலீசில் கிடைத்தது.
தொடர்ந்து கழக்கூட்டம் போலீசார் இன்று கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் அதன் பேரில் இன்று காலையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீசார் வந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் சிறுமியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். மேலும் தொடர்ந்து கேரளா போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

குளச்சலில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை

தூத்துக்குடி பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அலோசியஸ் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக் (17) தக்கலை அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார். அடுத்த வாரம் கல்லூரி திறக்க உள்ள நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை
என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற ஏக்கத்தில் ஜாக்சன் டியூக் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜாக்சனின் பள்ளி தோழி ஒருவர் அஜீஸ் ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜாக்சன் தன்னிடம் வீடியோ காலில், கல்லூரி கட்டணம் செல்ல முடியாததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அழைப்பை துண்டித்ததாக கூறியுள்ளார். தாயார் அறையில் சென்று பார்த்த போது, அறை பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ஜாக்சன் இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குளச்சல் துறைமுகம் ரூ. 300 கோடியில் விரிவாக்கம் :கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா,  நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- ரூ. 300 கோடி மதிப்பீட்டில் குளச்சல் மின்பிடித்துறைமுக விரிவாக்கம் அமையவுள்ள இடம் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டதோடு, அதன் திட்ட விளக்கம் கேட்டறியப்பட்டது. மேலும், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தி மீன்விற்பனை செய்யவும், மீன்பிடி விசைப்படகுகளை நிறுத்தவும் போதிய இடவசதியினை ஏற்படுத்தி தர குளச்சல் மீன்பிடித்துறைமுக பயனீட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்
அக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குளச்சல் புனித மரியன்னை தொடக்க பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் அருகாமையில் அமைந்துள்ள பனை வெல்ல கூட்டுறவு சங்கம் பயன்படுத்தபடாத இடத்தினை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திட பொது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து, அதற்கான இடத்தினை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மா. சின்னகுப்பன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் Insta வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை Download செய்து மேலும் பலருக்கு அனுப்பியதாக நான்கு பேர் மீதும் போக்சோ வழக்குப்பதியப்பட்டுள்ளது மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் அபினேசுக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு
சிறிது நாள் கழிந்து இருவரும் வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அபினேஷ் சிறுமியை தன்வயப்படுத்தி அவரை வீடியோ காலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அச்சிறுமி அபினேசுடன் நட்பை முறித்துக் கொள்ளவே, கோபமடைந்த அபினேஷ் தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதனை அபினேஷின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து அதனை மேலும் பலருக்கு சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் வரும் 22 அன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்

கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் 22.08.2024 (வியாழக்கிழமை ) அன்று காலை 8.00 மணி முதல் 2.00 மணி வரை மின் தடை கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை,மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம்,எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம்
முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலணி. ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. #karungal #paliyadi #kanniyakumari

தக்கலையில் கணவனை விட்டுட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்

 தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள  காதலனுடன் சென்ற இளம்பெண்

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வார இறுதி அல்லது வரும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்பு



Weather night update:- 15/8/2024, 8:30 pm 
=============
  கடந்த சில நாள்களாக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டி நிலை கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது அகன்று இன்று கேரளாவில் கொச்சி கடற்கரையை ஒட்டி அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சியாக சுழன்று வருகிறது தற்போது !
   இதனால் இன்று பகல் நேரத்தில் 15_8_2024 #வியாழன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் காற்று ஊடுருவ ஆரம்பித்து உள்ள காரணம் காற்று வீசும் திசைக்கு எதிரே நிற்கும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சூழ்ந்து வானுயந்து நிற்கும் மேற்குதொடர்ச்சி மலைகளில் பகல் நேரம் முழுவதும் மேக கூட்டங்கள் உருவாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளான #கோதையார்,#அப்பர்கோதையார், #அச்சன்காடு, #அகஸ்தியர்தெற்குமலை சரிவு குமரி #முத்துகுழிவயல் , உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்தது ,
    இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அரபிக்கடல் பகுதியில் தற்காலிகமாக சுழன்று வருவதால் இன்று #இரவு ,#நள்ளிரவில் , நாளை வெள்ளிக்கிழமை #அதிகாலை ,காலை நேரத்தில் ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதும் என்பதால் மேக கூட்டங்கள் உருவாகி பரவலாக மிதமானது முதல் சாரல் மழை வரை கன்னியாகுமரி ,கேரளா சமவெளி பகுதியில் நள்ளிரவுக்கு மேல் #அதிகாலை, #காலை நேரத்தில் பொழியும் வாய்ப்பு உள்ளது,
   இனி வரும் அனைத்து நாளிலும் #நள்ளிரவில், #அதிகாலை ,#காலை நேரத்தில் தினசரி குமரி மாவட்டத்தில் மழை கட்டாயம் அனைத்து பகுதிகளிலும் இருக்கும்
    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வார இறுதி அல்லது வரும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்பு உள்ளது இந்த மேலடுக்கு சுழற்சி வலிமை பற்று வலுவான ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் தென்மேற்கு பருவ காற்றை கன்னியாகுமரி கேரளாவிற்கு வரும் நாளில் வலுவான மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோத ஆரம்பிக்கும் பட்சத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே இருக்கும் கன்னியாகுமரி கேரளா சமவெளி பகுதி முழுவதுமே வரும் வாரத்தில் சிறப்பான மழை வாய்ப்பு உள்ளது,
   எனவே நெல் அறுவடை ஆரம்பித்து இருக்கும் விவசாயிகள் இன்னும் 2-3 நாளில் அறுவடை பணிகளை விரைவாக முடிப்பது நல்லது !
    ==================
மீனவர்களுக்கான காற்று எச்சரிக்கை இந்த வார இறுதி முதல் அடுத்த வாரம் முழுவதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது 
==================



#weather #colacheltoday #kanniyakumari 
#nagercoil 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

குழித்துறை, களியக்காவிளை பகுதியில் 13.8.2024 (செவ்வாய் கிழமை) மின்தடை

மின் தடை 

குழித்துறை, களியக்காவிளை, பளுகல் பகுதியில் 13.8.2024 (சொல்வாய் கிழமை) மின்தடை

குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு,கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் சொல்வாய் கிழமை (ஆகஸ்ட்.13) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

_____________________________________________



புதுக்கடை, இரவிபுதூர்கடை, கிள்ளியூர், சூரிய கோடு, ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளில் 12 .8. 2024 முதல் 17.8.2024 வரை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை 

12 8 2024 அன்று கீழ்குளம் ‌.பொத்தியான் விளை. வில்லாதிவிளை, பாறையடி, வெள்ளிகோடு, சீயோன்மலை, கண்ணனூர், பாரதியார்தெரு, அன்னைதெரசா காலனி,இனயம், சின்னத்துறை, ஓடைக்கரை, வாறதட்டு, கல்லாலுமூடு, பென்னவிளை

14.8. 2024 அன்று நெடுந்தட்டு, ஆனான்விளை, ஒன்பதாம்தெங்கு, தண்டுமணி, முள்ளூர்துறை, ராமன்துறை, செறுகோல்

16 8 2024 அன்று ஆடு தூக்கி, வயக்கரை 

17.8.2024 அன்று. தைவிளை, முள்ளுவிளை, வடக்குமாதாபுரம், வாழைத்தோட்டம், வெட்டுவிளை, தாமரைகுளம், ஊசி கோடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.



#Colacheltoday #marthandam #kanniyakumari #Colachel #powercut 


சனி, 10 ஆகஸ்ட், 2024

நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து விருந்தினர் மாளிகை வரை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகம் முதல் செட்டி குளம் சந்திப்பு வரை வேலை நடைபெற்று வருவதால் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1.ஆசாரிபள்ளம், டெரிக் சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், செட்டி குளம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும்  பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு ஆசாரிபள்ளம், பால்பண்ணை சந்திப்பு,வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய சந்திப்பு, WCC , மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.

2.தோட்டியோடு ,சுங்கான்கடை, பார்வதி புரம், பால்பண்ணை,டெரிக்சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் சென்று வந்த பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு சுங்கான்கடை, பார்வதி புரம், வெட்டூர்ணிமடம், WCC வழியாக அண்ணா பேருந்து நிலையம் அல்லது வடசேரி பேருந்து நிலையம் செல்லுமாறு வழித்தடம் மாற்றம் செய்யப்படுகிறது.

3.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி வழியாக செல்லும் வாகனங்கள் பால்பண்ணை, ஹோலி கிராஸ் மருத்துவமனை, வாட்டர் டேங்க் வழியாக செல்லலாம் அல்லது ஆட்சியர் அலுவலகம், செட்டிகுளம் சந்திப்பு, கோர்ட் ரோடு வழியாக செல்லுமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

4.வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டெரிக் சந்திப்பு வழியாக ஆசாரிபள்ளம் அல்லது பார்வதி புரம் செல்லும் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மேற்கண்ட வழித்தட மாற்றம் போத்தீஸ் ரவுண்டானா பகுதி வேலை முடியும் வரை உத்தேசமாக 10.08.2024 முதல் 14.08.2024 ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட போக்குவரத்து  பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு, மாற்றத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#Traffic #Nagercoil #City #colacheltoday 

புதன், 7 ஆகஸ்ட், 2024

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறை

நாகர்கோவில் அடுத்த கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி சாலையில் இன்று மாலையில், சென்ற அரசு பேருந்து படிக்கட்டில்தொங்கியப்படி பள்ளி,கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்,இதனை கவனித்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தி படிக்கட்டில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டு அறிவுரை கூறினர்,மேலும் நடத்தினரிடம் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

செய்தி : 2
____________

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதி சாலைகளில் அபாயகரமாகவும்,
இருசக்கர வாகனத்தில் பதிவெண் இன்றியும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும்,சாலையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வரப்பட்ட 9 இருசக்கர வாகனங்களை நாகர்கோவில் போக்குவரத்துபோலீசார் பறிமுதல் செய்தனர்,மேலும் அந்த ஒன்பது இருசக்கர வாகனங்களுக்கும் ரூ.54500 அபராதம் விதித்தனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...