வியாழன், 30 ஏப்ரல், 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

கலெக்டர் தகவல்


குமரியில் 5 ஆயிரத்து 962 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் உதவி கோரி 476 மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 178 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலுறை, கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் டிஷ்யூ பேப்பர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

புதன், 29 ஏப்ரல், 2020

மண்டைக்காடு மக்களுக்கு குளச்சல் ஏ . எஸ் . பி அலுவலக ஊழியர்கள் நிவாரண உதவி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது . இதனால் ஏழைகள் , ஆதரவற்றவர்கள் , குடிசை வாசிகள் உணவு பொருள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வந்தாலும் சில இடங்களில் குடிசை வாசிகளுக்கு | நிவாரண உதவிகள் கிடைக்காமல் உள்ளது . இதனையறிந்த குளச்சல் ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ் திரி , அவரது அலுவலக ஊழியர்கள் , அவரது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் , ஓட்டுனர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆகி யோர் தங்கள் சொந்த செலவில் கொரோனா நிவாரணம் அளிக்க முன்வந்தனர் . இதையடுத்து மண்டைக்காடு அருகே பரவன் காலனி பொதுமக்களுக்கு அரிசி , காய்கறிகள் உள்பட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது . ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ்திரி நேரில் சென்று மக்களுக்கு வழங்கினார் . அப் போது சிறுவர் , சிறுமிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது . இதில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் , சப் - இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ , சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை





மத்திய- மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் ஆழ்கடல் மீனவர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். ஜூன் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதால் மீனவர்கள் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். ஏனெனில் அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாததால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பை ஈடுசெய்ய, இந்த வருடத்தின் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செவ்வாய், 28 ஏப்ரல், 2020

குழித்துறை அரசு ஆஸ்பத்திரிசிறப்பு பிரசவ வார்டுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. நிதி உதவி





விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு செயல்படுகிறது. குமரி மேற்கு மாவட்ட கடலோரம் மற்றும் மலையோர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே மார்த்தாண்டம், விளவங்கோடு, கிள்ளியூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் 65 படுக்கைகளுடன் சிறப்பு பிரசவ வார்டு அமைக்கப்படுகிறது. இதற்கு உள்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தேவையான அனைத்து நிதியையும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இறந்தகுமரி கொத்தனாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்





குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜில்குமார் (வயது 47). இவருடைய மனைவி விஜயா (45). இவர்களுக்கு அஜீஷா (21) என்ற மகளும், அருண் (20) என்ற மகனும் உள்ளனர். அஜில்குமார் கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் இருந்தார். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அங்கு தங்கியிருந்த அறையில் முடங்கினார். அப்போது, திடீரென அவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ஆஸ்பத்திரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அதே சமயத்தில், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால், 13 நாட்களாக கொத்தனார் உடல் அங்கேயே உள்ளது. இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து அஜில்குமார் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 27 ஏப்ரல், 2020

மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது



பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று இறச்சகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து சோதனை செய்த போது, பாட்டிலில் மதுபானம் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நாகர்கோவில் சிதம்பரநகர் புதுத்தெருவை சேர்ந்த சிவதாஸ் (வயது 21), கணேசபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (24) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மது பாட்டிலை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குளச்சல் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை

குளச்சல்

போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை



கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் முழுழூச்சுடன் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து குளச்சலில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் டாக்டர் பெமிலா, செவிலியர் வசந்தா ஆகியோர் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு இயல்பான உடல் வெப்ப நிலை இருந்தது. மேலும் சளி, இருமல் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்தனர்.

சனி, 18 ஏப்ரல், 2020

ஊரடங்கின் போதுகள்ளச்சாராயம் விற்றதாக 56 பேர் கைது





மனித உயிர்கொல்லி நோயாக விளங்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடற்கரை மற்றும் மலையோர கிராமங்கள், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் ஹெலி கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது ஏராளமான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தது தெரியவந்தது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கின் போது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு





தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த அவதூறை, புதுக்கடை கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது 39) என்பவர் பரப்பியது தெரியவந்தது. 

இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மோகன் (58) புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

குளச்சலில் உணவு கிடைக்காமல் அலையும் குரங்கு வீட்டுக்குள் புகுந்து பழங்களை தின்றது

குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெரிய குரங்கு ஒன்று அலைந்து திரிந்து வருகிறது . பகல்வேளையில் சிறுபெட்டிகடை , பழக்கடைகளில் புகுந்து பசி தீர்க்கும் அந்த குரங்கு இரவு அண்ணாசிலை சந்திப்பில் உள்ள ஆலமரத்தில் தங்கும் . 
தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த குரங்கு உணவுகிடைக்காமல் குளச்சல் பகுதியில் அலைந்து திரிந்து வருகிறது . நேற்று மதியம் காமராஜர் சாலையில் இந்த குரங்கு புகுந்தது . 

பின்னர் அங்குள்ள வீடுகள் மரங்களில் தாவி தாவி உணவு ஏதாவது கிடைக்குமா ? என அங்குமிங்கும் திரிந்தது . ஒரு சிறுமி ஆர்வ மிகுதியில் வீட்டிலிருந்து வாழைப்பழம் எடுத்து வந்து குரங்கு முன் வைத்தார் . அதை சாப்பிட்டு முடித்த குரங்கு அதே வீட்டுக்குள் புகுந்து அங்கு மீதியிருந்த வாழைப்பழங்கள் ,டிபனை  எடுத்து வெளியே கொண்டு வந்து சாப்பிட்டு  விட்டு சென்றது. இந்த காட்சிகளை சிறுவர் முதல் பெரியவர்வரை கண்டு மகிழ்ச்சி அடைந்தாலும் வீட்டுக்குள் குரங்கு புகுந்ததால் மீண்டும் மீண்டும் குரங்கு வருமா ? என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் . எனவே உணவின்றி தவிக்கும் இந்த குரங்கை வனத்துறையி னர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என பொதுமக்கள் வலிவுறுத்தி உள்ளனர் .

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

குளத்தில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து சாவு





சாமிதோப்பு அருகே உள்ள செட்டி விளையில் பூலாங்குளம் உள்ளது. அந்த வழியாக நேற்று காலை சென்றவர்கள், குளத்தில் ஆண் பிணம் மிதப்பதை பார்த்து, தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு குளத்தில் மிதந்த பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தவர் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரிய வந்தது. சாமிதோப்பு பதிக்கு வந்த அவர் குளத்தில் குளிக்க சென்ற போது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு



கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், சிறைகளில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும் சின்ன ,சின்ன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருக்கும் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையிலும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 62 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 5 பேரும், நேற்று 6 பேருமாக 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.......

வியாழன், 9 ஏப்ரல், 2020

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்நிலையில்  தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மருதவிளை கொற்றிகுளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் அழகியமண்டபம் பனங்காலவிளை பகுதியை சேர்ந்த ராஜன்(வயது 39), அருள்(39), ஸ்டான்லி(32), சதீஷ்(29) ஆகிய 4 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

போதகர்கள் 2 பேர் மீது வழக்கு ஊர்மக்களை அழைத்து ஆராதனை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊர் டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . வெளியில் சுற்றிதி ரிபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் . வாக னங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது . கோவில்கள் ,ஆலயங்கள் , மசூதிகள் மூடப்பட்டுள்ளன . 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொல்லங் கோடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தில் போதகர்கள் 2 பேர் ஊர் மக்களை திரட்டி ஆலயத்தில் ஆராதனை நடத்தினர் . இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் விரைந்து சென்று தடை உத்தரவை மீறி ஆலயத்தில் கூடி இருந்தவர்களை விரட்டி விட்டனர் . பின்னர் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக போதகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் . 

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...