புதன், 13 நவம்பர், 2024

தக்கலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மாதாந்திர பணிக்காக மின்தடை

மின்தடை தக்கலை மின் விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: தக்கலை உபமின் நிலையத்தில் மற்றும் உயர் மின்அழுத்த பாதையில் வருகிற 14ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்படுகிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தக்கலை, மணலி, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டிகோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு,மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்ட பம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய இடங்களுக்கும், அதனை சார்ந்த துணை கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.

திங்கள், 11 நவம்பர், 2024

வரும் 12 , 13 தினங்களில் குமரியில் எங்கெல்லாம் மின் தடை

செம்பொன்விளை துணைமின் நிலையத்தில் நாளை (நவ., 12) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்தி கோடு, சேனம்விளை, நெய்யூர், குளச்சல், உடையார்விளை, இரும்பிலி, சைமன் காலனி, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம்,
திங்கள்நகர், இரணியல், கண்டன்விளை, பத்தளை, தலக்குளம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.____ 13.11.2024 (புதன்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 13.11.2024 (புதன்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

லாரி மோதி சிறுமி(6) வயது சிறுமி பலி குமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவி உமையாள் (6) இன்று பள்ளியிலிருந்து அவரது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மயிலாடியில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டாரஸ் லாரி திடீரென பின்னால்
வந்ததில், இருசக்கர வாகனம் மீது மோதி சிறுமி உமையாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
குமிரியில் பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று அறிவித்தார். அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்

திங்கள், 16 செப்டம்பர், 2024

மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

பேச்சிப்பாறை அடுத்த குற்றியார் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் இளைய மகள் அபிநயா (17). இவர் அங்குள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். நேற்று (செப் 15) ஓணம் பண்டிகை முன்னிட்டு மாலை 6 மணியளவில் அளவில் அபிநயாவும், மற்றொரு இளம் பெண்ணுமாக மாத்தூர் தொட்டி
பாலத்தை பார்வையிட சென்றனர். அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்ற கொண்டிருந்தனர். அப்போது அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டே சென்றார். பின்னர் அபிநயா செல்போனில் எதிர்முனையில் பேசியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கே சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்

சனி, 14 செப்டம்பர், 2024

குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வில்லிவிளையைச் சேர்ந்தவர் டெம்போ டிரைவர் முருகேசன் (52). இவர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் முருகேசனை தேடி வந்த நிலையில், நேற்று (செப்.,13) ஈத்தாமொழியில் வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். _____________________________________________________________________________________________ செய்தி துளிகள்: குமரி மாவட்டம் திங்கள் நகர்: மினிபேருந்து ஓட்டுநர்-பேரூராட்சி ஊழியர் மோதல் திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மினி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது. இதற்கு பேரூராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும் மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். _____________________________________________________________________ _________________________ கைது செய்யப்பட்ட துணை சர்வேயருக்கு நீதிமன்ற காவல் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட கிள்ளியூர் தாலுகா துணை சர்வேயர் சிறையில் நேற்று(செப்.13) அடைக்கப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் (பொறுப்பு) நீதிபதி உத்தரவிட்டார். நில அளவை செய்வதற்காக லஞ்சம் வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். _______________________________________________________________________________________________ குமரி அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு குமாரபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன் இவர் சித்திரங்கோட்டில் மகள் வீட்டில் இருந்தார். மகளின் மகன் ராஜசேகருக்கு சொந்தமான காரை 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் போர்டிகோவில் ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி வைத்திருந்தார். 12ம் தேதி கார் உருண்டு முத்தையன் மீது மோதியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்
this

வியாழன், 12 செப்டம்பர், 2024

குமரி : கள்ளக்காதலுடன் ஓட முயன்ற 42 வயது பள்ளி ஆசிரியை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது வீட்டிற்கு உறவுக்கார வாலிபர் ஒருவார் வந்து செல்வது வழக்கம். பின்னர் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஒருநாள் வாலிபரும் ஆசிரியையும்
உல்லாசமாக இருப்பதை கண்டு பிரச்சனை ஏற்பட்டு, மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதில் ஆசிரியை காது கிழிந்து தொங்கி உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கள்ளக்காதலன் காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்த நேரம், ஆசிரியை கணவர் திடீரென வந்ததால் மீண்டும் வாலிபரை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்றது. போலீசார் ஆசிரியை மற்றும் அவரது கணவர், கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியை கள்ளக்காதலுடன் தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாய் இருந்தார். போலீசார் பலமுறை சமாதானம் செய்தும் ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் போலீசார் ஒரு வழியாக அந்த ஆசிரியை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்

1000 மேற்பட்ட கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய கன்னியாகுமரி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று முன்தினம் (செப்.,10) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே இன்று (செப்., 12) நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி, சன்னதி தெரு, படகு தளம் செல்லும் சாலை, கடற்கரை சாலை, சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது

புதன், 11 செப்டம்பர், 2024

குழந்தைகளை தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்ற பெண்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஊரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த 25 வயது கார் டிரைவர் ஒருவருடன் அந்த பொண்ணுக்கு பழக்கமாகி, அது கள்ளக் காதலாக மாறி அவர்கள் பல
இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். இதை அறிந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் அறிவுரை கூறியதும் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 35 பவன் தங்க நகைகள், ரூபாய் 85 ஆயிரத்துடன் மாயமானார். இது தொடர்பாக கணவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். நேற்று (செப்.,10) அந்த கள்ளக்காதல் ஜோடி மார்த்தாண்ட போலீஸ் நிலையம் வந்துள்ளது. அப்போது கணவரும் குழந்தைகளும் அந்த பெண்ணிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவள் கணவரிடம் வாழ முடியாத என கூறி கழுத்தில் கிடந்த தாலி மற்றும் நகைகள், பணம் போன்றவற்றை வீசி எறிந்து விட்டு கள்ளக்காதலுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸ் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த பெண் ஒரு ஆட்டோ வரவழைத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தார்

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சர்வதேச மகளிர் வாள்போட்டி கன்னியாகுமரி மாவட்ட மாணவி பங்கேற்பு

சர்வதேச மகளிர் வாள் விளையாட்டுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த என். வி ஜெனிஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அவருடன் மேலும் ஆறு பேர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர். ஜெனிஷா 12-ம் வகுப்பு மாணவியாவார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் சார்பில் ஆற்றூர் அடுத்த கல்லுப்பாலம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவியை கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக தலைவர் சிந்துகுமார், செயலாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் செல்வகுமார் உட்பட பலர் பாராட்டி உள்ளனர்.

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பு

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்புப் படையினர் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் திங்கள்கிழமை காலை நல்ல பாம்பு பதுங்கியிருப்பதைப் பார்த்த பணியாளர்கள்
குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்குகு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு மீட்புப் படையினர் வந்து பாம்பைப் பிடித்தனர். அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், பின்னர், அந்தப் பாம்பு வனப் பகுதியில் விடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

ஆரல்வாய்மொழி: பைக் விபத்தில் Bjb நிர்வாகி உயிரிழப்பு

ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன் பகுதியை சேர்ந்தவர் பாரத் என்ற மகேஷ் (46). இவர் வெல்டிங் தொழிலாளி. மேலும் அதே ஊராட்சியின் பாரதிய ஜனதா தலைவராகவும் செயல்பட்டு வந்தார். மகேஷ் தனது நண்பர் பூதலிங்கம் (45) என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கிருந்து அவர்கள் செண்பகராமன் புதூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த
மகேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த மகேஷுக்கு பகவதி அம்மாள் என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

இரணியல் அருகே 4 வழிச்சாலையில் பைக் ரேஸ் ,வாலிபர் ஓட்டிய பைக் மோதி தம்பதி படுகாயம்

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலை தோட்டியோட் டில் இருந்து நான்கு வழி சாலை பிரிந்து கொன்னக் குழிவிளை, நுள்ளிவிளை. மணக்கரை ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறது. பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் நடந்து வந்தாலும், இந்தப் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலையை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அகலமாக உள்ள இந்த சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், ரீல்ஸ் எடுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று மாலையும் மணக்கரை நான்கு வழிச்சாலைக்கு பைக்கில் வந்த வாலிபர்கள் சிலர் பைக் ரேஸ்
நடத்தி ரீல்ஸ் எடுத்துள்ளனர். சிறிப் பாய்ந்த பைக்குகளில் ஒரு வரை ஒருவர் முந்தி சென்றதாக தெரிகிறது. அப்போது ஒரு பைக் புளியமூடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற பைக் மீது வேகமாக மோதியது. இரண்டு பைக்குகளும் இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் முன்னால் பைக்கில் சென்ற தம்பதியரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிஆர்பி எப் வீரர் ராஜன் (47, அவரது மனைவி ஹேமா (42 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் வலி யால் துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த வாலிபர் வினோத் என்பவரும் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்ப வம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒதுக்குப்புற மான இந்த நான்கு வழிச் சாலையை பொதுமக்கள் நலன் கருதி போலீசார் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ok

போலீஸ் வாகனத்தை இடிக்க முயன்ற சொகுசு கார் - பறிமுதல்

நித்திரவிளை அருகே உள்ள கல்வெட்டான் குழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பதினொரு மணியளவில் இரண்டு சொகுசு கார்களில் வந்தவர்கள் குடிபோதையில் நின்று கொண்டு, அந்த பகுதி வழியாக பைக்கில் சென்ற ஒரு நபரிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் நித்திரவிளை போலீசார் ரோந்து பணிக்காக சென்றனர். போலீசாரை கவனித்த குடிமகன்கள் உடனடியாக போலீஸ் வாகனத்தை இடிப்பது போல சென்று விட்டு, சொகுசு காரில் தப்பி சென்று விட்டனர்.
உடனடியாக போலீசார் பின்னால் சென்று அந்த 2 கார்களையும் துரத்தினார்கள். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய போலீசார், துத்தூரில் வைத்து ஒரு சொகுசு காரை மட்டும் மடக்கி படித்தனர். உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் மடக்கி பிடித்த காரை உடனடியாக போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். சாலையில் போதையில் நின்று பிரச்சனை ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

திங்கள்நகர்: மாணவி கர்ப்பம் காதலன் மீது போக்சோ

குமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த சில நாட்களாக உடலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு பரிசோதனை செய்த போது மாணவி 3
மாதம் கர்ப்பமாக இருந்த தெரிய வந்தது. உடனே மாணவியிடம் நடத்திய விசாரணையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருவதாகவும், இதை யடுத்து வாலிபர் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்று திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக மாணவி தெரிவித்தார். இது குறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த 20 வயது வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது மாணவி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர் வெளியூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 21 வயதும் மாணவிக்கு 18 வயதும் நிறைவடைந்த உடன் இரு வீட்டார்கள் இணைந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

குமரி மாவட்டம் குமாரபுரம் அருகில் பைக் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அடுத்த கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற செல்வராஜ், சாலையை கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக அவ்வழி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த வரை அக்கம் பக்கத்தில் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் உயிரிழந்தார். கொற்றிக்கோடு போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம்

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு பூப்பது வழக்கமாகும். அதன்பின் அந்த மரத்தின் வாழ்வு முடிந்து விடும். பனை மரம் பூத்துக் குலுங்குவதை ஏராளமானோர் அபூர்வமாக பார்த்துச் செல்கின்றனர்

ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டி வரப்பட்ட கனிம வள லாரி ரூ.15000 அபராதம் விதித்து பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், இன்று 07.09.2024 ம் தேதி, நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் வடசேரியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, இரவு 10 மணிக்கு முன்பே நகர்ப்பகுதிக்குள் இயக்கப்பட்ட கனரக லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமம் இன்றி கனிமவள லாரியை
இயக்கிய மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு ரூ.10000 அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு லாரியை ஓட்ட அனுமதி அளித்த லாரி உரிமையாளருக்கு ரூ.5000 அபராதமும் ஆக மொத்தம் ரூ.15000 அபராதம் விதித்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

சனி, 7 செப்டம்பர், 2024

தக்கலை அருகே ரேஷன் கடையில் தீ விபத்து

தக்கலை பெருமாள் கோவில் தெருவில் அரசு நியாய விலை கடை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டைகள் மூலம் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ரேஷன் கடையில் இன்று காலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து தீ மளமளவென பரவி ரேஷன்
கடையில் வைக்கப்பட்டிருந்த கணக்கு புத்தகங்கள், மற்றும் தேயிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பரவியதில் அவை எரிந்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர். உடனடியாக இது குறித்து தக்கலை தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ வித்து தவிர்க்கப்பட்டது. பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என தெரிகிறது.

மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு குலசேகரம் அடுத்த பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவருக்கு சரிகா என்ற மனைவி, தியா , தீரஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் திருவனந்தபுரத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு
ராஜேஷ் தனது மகன் தீரஜ் - டன் அந்தப் பகுதியில் உள்ள புத்தன்குளம் என்ற குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர் தீரஜ் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து அப்பாவை காணவில்லை என தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்ட சரிகா அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு குளத்திற்கு சென்றார். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடிய போது, இறந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருந்த பள்ளி மாணவன் பலி: விஷப்பூச்சி கடித்ததா?

பூதப்பாண்டியை அருகே காட்டுபுதுர் பகுதியை சேர்ந்தவர் தங்க குமாரி இவரது கணவர் கடந்த ஒரு வருடம் முன்பு தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இவருக்கு தனு மற்றும் தனுஷ் சிவா வயது என்ற குழந்தைகள் உள்ளனர். தனு காட்டு புதுர் அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் தங்க குமாரி தன்னுடைய கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனுவும்
அவருடைய தம்பி தனுஷ் சிவாவும் வீட்டில் இருந்துள்ளார்கள். காலை சுமார் 11.00 மணியளவில் திடீரென தனு எனக்கு மூச்சு விட முடியவில்லை ஏதோ கடித்துள்ளது போல் தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். அருகிலுள்ளவர்கள் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தனு இறந்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சிலை

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இந்த பாலகம் முன்பு இன்று (செப்.,6) காலை ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலை ஒன்று இருந்தது. இதைப் பார்த்த அங்குள்ள ஊழியர்கள் நேசமணி நகர்
போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விநாயகர் சிலையை அங்கு வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த விநாயகர் சிலையை இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி உள்ளதாக தெரிய வந்தது. அவர் அந்த விநாயகர் சிலையை நேற்று (செப்.,5) ஆவின் பாலகத்திற்கு வெளியே வைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு அந்த சிலையை எடுக்க மறந்து சென்று விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. உடனே சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். அவர் விநாயகர் சிலை வாங்க வருவதாக கூறினார். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த சிலையை உடனடியாக அங்கிருந்த மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் விநாயகர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

காதலி பிரிந்து சென்றதால் அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலை

அம்மாண்டிவிளையை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார்.
இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் சுரேஷ் அந்தப் பெண்ணிடம் சென்று சமரசமாகி, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண் அவருடன் செல்ல மறுத்ததால், மனமுடைந்த சுரேஷ், அந்த பெண் வீட்டு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குமரி மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.5) உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வியாழன், 5 செப்டம்பர், 2024

போக்குவரத்து விதிமீறல்: 17 பைக்குகள் பறிமுதல்; ரூ. 75 ஆயிரம் அபராதம்

*கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - 17 அதிவேக வாகனங்கள் அபராதம் விதித்து பறிமுதல்* கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் பதிவெண் இல்லாத அதிவேக இருசக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு அபாயகரமாக ஓட்டுதல், ஸ்டண்ட் செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள், மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின்
மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் சாதாரண உடையில் ஸ்காட் கல்லூரி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சாலை விதிகளை மீறியும் குடிபோதையிலும் ஓட்டி வரப்பட்ட 17 வாகனங்களை சுமார் 75000 ரூபாய் அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். பின்னர் இளைஞர்களின் பெற்றோர், உறவினர் வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கியும், அபராதங்கள் செலுத்த வைக்கப்பட்டும், பதிவெண் தகடுகள் சரி செய்யப்பட்டும், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி பகுதிகளில், அதிவேக வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரியில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி ஒன்றிய ஆணையர் இடைநீக்கம்

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊராட்சி ஒன்றிய ஆணையர் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராகப் பணியாற்றி வருபவர் சையதுஉசேன் (46). இவர் பாலியல் தொல்லை கொடுத் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியர் அளித்த புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் விசாரணையில், அந்த அரசு ஊழியர் பாலியல் தொல்ல
ை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, சையது உசேனை இடைநீக்கம் செய்து, ஆட்சியர் ரா. அழகுமீனா புதன்கிழமை அன்று உத்தரவிட்டார்.

இருசக்கர வாகன விபத்தில் மாணவர் உயிரிழப்பு

கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலையில் அஜித் தனது
நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் கருமாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருச்சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதியது. இதில் அஜித் உட்பட இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் கருங்கல் போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (sep 4) அஜித் உயிரிழந்தார். அவர் நண்பருக்கு தொடர்ந்து சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல் போலீசார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.குமரி மாவட்டத்தில் அதிகமான விபத்துக்கள் தினமும் நடந்து வருவது குமரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

புதன், 4 செப்டம்பர், 2024

குமரியில் அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை

திங்கள்நகர் அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் அவர் மனைவி ராஜம் . இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு தெரு பகுதியில் செல்லும் போது, எதிரே அழகிய மண்டபத்திலிருந்து குளச்சல் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளான செல்வராஜ், ராஜம் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு
பஸ் டிரைவர் ராபர்ட் சிங் என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமர்தீன் (செப்.,2) தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவர் ராபர்ட் சிங்கிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரேவதி வாதாடினார். தொடர்ந்து ராபர்ட் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மார்த்தாண்டம் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது; 3 பெண்கள் மீட்பு

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அடுத்த மதி ஜங்ஷனில் உள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி, சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் மசாஜ்
சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த யோபின் சாம், அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ராணிபேட்டை, திருப்புனம், தர்மபுரி பகுதியை சேர்த்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் 3பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் ______________________________________________________________________________________________ குமரி மாவட்டத்தின் இன்றைய செய்தி துளிகள்:3.9.2024 * குமரி மாவட்டம் திடல் அருகே விளை நிலங்களில் புகுந்த யானை கூட்டம். சுமார் 1300 வாழை மற்றும் 20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியது.
*மார்த்தாண்டம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பேருந்தில் 18000 ரூபாயை பறிகொடுத்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுலோரா இவர் குளச்சலில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார் பேருந்தில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருத்து இதனைப் பயன்படுத்தி இவர் கையில் வைத்திருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றனர் நாகர்கோவில் பஸ் நிலையம் வந்ததும் தனது மணி பர்ஸை காணாத
சுலோரா கூச்சலிட்டார் அந்த பர்ஸில் 18000 ரூபாய் இருந்தது என்று கூறி அழுதுள்ளார் உடனடியாக அந்த பஸ்ஸை கோட்டாறு காவல் நிலையத்திற்கு பஸ் டிரைவர் கொண்டு சென்றார் காவலர்கள் பேருந்து ஏறி அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர் ஆனாலும் பர்ஸ் கிடைக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்

திங்கள், 2 செப்டம்பர், 2024

பைக் மீது வாகனம் மோதி விபத்து சிறுவன் பலி தந்தைக்கு காயம்

குமரி மாவட்டம் பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் விஜு .நேற்று மாலை பைக்கில் தனது மகன் ஆகாஷ் 12 வயது ஆகிறது உறவினர் ஒருவரின் கல்லறை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போத
வேர்க் கிளம்பி தபால் நிலையம் அருகில் செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த ஜீப் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஆகாஷ், தந்தை விஜு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆகாஷை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை விஜு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்த சிறுவன் தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறான். திருவட்டார் போலீசார் வழக்கு விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற ஜீப் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரியில் நாளை (3.9.2024) எங்கெல்லாம் மின் தடை

03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி,வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.மேலும் 03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம்,
வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுள்ளது.

சனி, 31 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் அருகே வள்ளத்தில் இருந்து கடலில் விழுந்த மீனவர் பரிதாப சாவு

தேங்காப்பட்டணம் அடுத்த இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாசன் மகன் ஆரோக்கிய நிதின் இவர் தனது தம்பியான நிதிஷ் என்பவரின் பைபர் வள்ளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். 

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் போலீசாரால் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விபச்சாரம் நடைபெற்ற வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு
சோதனை மேற்கொண்டதில் மூன்று அழகிகள் மற்றும் 2 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகரில் தனி வீட்டில் வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதன், 28 ஆகஸ்ட், 2024

குமரி: இந்திய பாஸ்போர்ட்டை சட்ட விரோதமாக எடுத்த இலங்கை அகதி கைது

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் Sri Lanka அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலீஸ் குவிப்பு

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசங்கத்தால் தடை செய்யப்பட்ட காச்சா மூச்சா வலையை சில மீனவர்கள் மறைமுகமாக அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், தடை செய்யப்பட்ட வலையை பயன் படுத்தக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

Sunita & Butch Might Have To Drink Recycled Urine

Sunita Williams & Butch Willmore Might Have To Drink Recycled Urine While Stuck In Space Astronauts Sunita Williams & Butch Willmore might end up drinking recycled urine while stuck in space, claimed Meganne Christian, a member of the European Space Agency (ESA), as per reports.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது

தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காப்புக் காட்டில் உள்ள அரசு உணவு பொருள் குடோனில் லோடு மேனாக வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது

திருவட்டாரை அடுத்த வீயன்னூரில் வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் போலீசார் தேடிய நிலையில் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்த பிரபல கொள்ளையனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சனி, 24 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு நடத்தினர் அபராதம் விதிப்பு



குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரியில் கீழரத வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பெண் கடத்தி கொலை: கணவரின் தம்பிக்கு ஆயுள் தண்டனை




குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையைச் சேர்ந்த ஜோஸ் மனைவி கவிதா . ஜோஸின் தம்பி சசிகுமார் கார் டிரைவர். 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரி கடலில் செத்து மிதந்த மீன்கள்


கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் ஒரு பறம் சீற்றமாகவும் மறுபுறம் உள்வாங்கியும் காணப்பட்டது. இதற்கிடையில் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக கடலில் மழை வெள்ளம் வந்து கலந்தபடி இருந்தது. இதனால் கடலின் நிறமே மாறி செம்மண் கலந்தது போன்று சிகப்பு நிறத்தில் தென்பட்டது


மேலும் கடல் நீரும் கடுமையான குளிராக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி



குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் அறை எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 2 சிறுமிகள் உள்பட 4 பேரையும் மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நான்கு
பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பத இரண்டு சிறுமிகளும், சிறுவனும் 17 வயதுடையவர்கள் என்பதும் இவர்கள் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களுடன் இருந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்றும் அவரது பெயர் சந்தீஷ்குமார் (வயது 22) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் காதல் ஜோடி என போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சந்தீஷ்குமார், லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் (62), மேலாளர் சிவன் (54) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் 17 வயது சிறுவனையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதில் லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கன்னியகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்கிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்தில் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக பலர், மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு. கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டது. இதையடுத்து எனது கல் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்குள் குவாரி அமைந்து இருப்பதாக அறிக்கை அளித்து, என்னுடைய குவாரி உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்தனர். இந்த உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரருக்கு கல் குவாரி உரிம சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்த பகுதியில் 10 வீடுகள் உள்ளன என்று 2011- ஆண்டில் வருவாய் கேட்டாட்சியர், கனிமவள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ள னர். 2015-ம் ஆண்டில் அந்த கட்டிடங்கள் அனைத்தும் பண்ணை வீடுகள்தான் என அப்போதைய கனிமவள உதவி இயக்குனர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பேரில் எந்திரத்தனமாக குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு குவாரி தொடர்ந்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகளின் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. அதேநேரம் மனுதாரரின் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் பொரு ளாதார பாதிப்பை அவர் சந்தித்து உள்ளார். அதிகாரிகள் வேண்டுமென்றே தவறு செய்ததால், மனுதாரருக்கு அவர்கள் இழப்பீட்டை வழங்குவது அவசியம். எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதார ருக்கு இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் தவறு செய்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...